பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________


-- - தொ .மூ.சி, ரகுநாதன் (பி. 1923). முதுபெரும் எழுத்தாளரும், தமிழ் நாட்டில் முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியுமான நூலாசிரியர். ரகுநாதன் அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட தமது இலக்கிய வாழ்க்கைக் காலத்தில், கதை, கவிதை, நாவல், இலக்கிய விமர்சனம், இலக்கிய ஆராய்ச்சி, பாரதி பற்றிய ஆய்வுகள் எனப் பலதுறைகளிலும் சாதனைகள் புரிந்தவர்; தமது இலக்கியப் பணிக்காக சோவியத் நாடு நேரு நினைவுப் பரிசு, சாகித்... அகாடமிப் பரிசு முதலிய Li பரிசுகளையும் விருதுகளையும் பெற்றவர். | இறபொப் புகழ் பெற்ற இEைY பற்ற சிறுகதை ஆசிரியரான அபரர் புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பராக விளங்கிய இவர், -'துமைப்பித்தனின் ஆளுமையை இலக்கிய நயத்தோடு L!படுத்தும் 'புதுமைப்பித்தன் வாழ்க்கை வரலாறு' நூலையும் எழுதியவராவார். நூலின் தலைப்புக்கேற்ப, புதுமைப்பித்தன் கதைகளைப்பற்றிய சில விமர்சனங்களையும் அவற்றில் இலைமறை காய்மறையாகக் குடிகொண்டுள்ள விஷமத்தனங்களையும் இனம் கண்டு கூறும் நோக்கில் எழுதப்பட்ட இந்நூல், அவற்றின் காரணகாரியங்களை ஆராயும் போக்கில், வரலாற்றியல் கண்னோட்டம் கொண்ட. ஒரு புதிய பார்வையோடு, முப்பதாம் ஆண்டுகள் தொடங்கி அறுபதாம் ஆண்டுகள் வரையிலான தமிழ்ச் சிறுகதை உலகின் போக்கையும் நோக்கையும் மறு மதிப்பீடு செய்யும் இலக்கிய ஆய்வு விமர்சன நூலாகவும் அமைந்துள்ளது. ஆசிரியர் தமது ஆய்வு முடிவுகளைத் தர்க்கரீதியாகவும் ஆதாரங்களோடும் அறுதியிட்டுக் கூறும் இந்நூல் ,. திரையிட்டு மூடப்பட்ட பல உண்மைகளையும் திகம்பரமாக்கும் நூலாகவும் விளங்குகிறது எனலாம்.