பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

புதுமைப்பித்தன் கதைகள்



நோட்டைத் திருப்பிக் கொடுத்து, 'நீங்கள் தவறு செய்துவிட்டீர்களோ என்று அஞ்சுகிறேன். இயல்பாக நடக்கக்கூடிய தவறுதான். நான் ஏழையாகத் தோற்றமளிக்கிறேன். உண்மையில் நான் ஏழைதான், என்றாலும் நான் ஒரு ஜென்டில்மேன் என் தந்தை ஒரு டாக்டர். தாய் ஒரு டாக்டரின் மகள், எனக்குப் பதினாறு வயது ஆன் போதே - ஒருவர்பின் ஒருவராகச் சில மாதங்களில் இறந்து விட்டனர். எனவே நான் படிப்பை முடிக்காமல், வேலைக்குப் போகும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. உங்களுக்கு நல்லது ஏதாவது செய்யவேண்டும் என்று விரும்பியதால்தான் அந்த நாய்களின் சண்டையில் குறுக்கிட்டு உங்கள் நாயைக் காப்பாற்றினேன் என்று சொல்கிறான். இதனைக்கேட்டு அந்தக் கீச்சுக்குரலியும் அவன் கையைப் பிடித்து வருத்தம் தெரிவித்து அவனைத் தன்னோடு தேநீர் அருந்த வருமாறு அழைக்கிறாள்..... இதற்கு மேல் அவனது கற்பனை மங்கி வறண்டுவிட்டது. - - அன்று பிற்பகல் நடந்ததையெல்லாம் மனத்தில் அசைபோட்டுக் கொண்டே பீட்டர் மேலும் மேலும் நடந்தான். அதற்குள் பொழுதும் இருண்டு விளக்குகள் எரியத் தொடங்கிவிட்டன. வானத்தில் பிறை நிலவும் தோன்றி விட்டது. இது அவனது தனிமையையும் வருத்தத்தையும் மேலும் அதிகமாக்கின. இதற்குள் நாய்க்கடியினால் ஏற்பட்ட காயத்தில் வலி அதிகமாகிவிட்டதால் அவன் பூங்காவை விட்டு வெளியேறி, ஒரு மருந்துக்கடைக்குச் சென்று, கையில் மருந்து போட்டுக் கட்டுப் போட்டுவிட்டு, ஒரு தேநீர்க் கடைக்குள் நுழைந்தான். ஒரு முட்டைக்கும் ஒரு கப் காப்பிக்கும் ஆர்டர் கொடுத்து விட்டுத் தன் சிந்தனையை மேயவிட்டான். அப்போது அவன் மனம் வேறு விதமாகச் சிந்தித்தது: 'அவளிடம் இப்படித்தான் சொல்லியிருக்க வேண்டும். என்னை ஒரு தெருப் பொறுக்கி அல்லது ஊர்சுற்றி என்று நீ - நினைத்துக் கொண்டாய். . மேலும், நீ என்னை அவமானப்படுத்திவிட்டாய். நீ மட்டும் ஆணாக இருந்திருந்தால், உன்னை உதைத்துக் கீழே தள்ளியிருப்பேன். இவ்வாறு நினைத்தபோது. இப்படிக்கூறினால் அவர்கள் தனக்கு நண்பர்களாக மாட்டார்கள். கோபத்தால் எந்தப் பயனும் இராது, என்றும் அவன் தீர்மானித்தான். இதனால் வாங்கிய முட்டையையும் காப்பியையும் விழுங்கி முடிப்பதே அவனுக்குச் சிரமமாக இருந்தது.