பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு.சி. ரகுநாதன்

43


 இதன் பின் அவன் தேநீர்க்கடையை விட்டு வெளியே வந்து, எங்கே செல்கிறோம் என்ற நோக்கமேதும் இன்றி வீதி வீதியாக நடந்து, இறுதியாக ஸ்ட்ராண்டு என்ற இடத்தை நோக்கிச் செல்லும் சந்து வீதிகளுக்குள் நுழைத்தான்.. (இதன் பின்னரே தேசிகன் குறிப்பிட்டுள்ள கதையின் கடைசிப் பகுதி வருகிறது. அது பின் வருமாறு:) கோவென்ட் கார்டனுக்கு அருகிலுள்ள தெருவொன்றில் ஒரு பெண் அவன் மீது மோதி உரசினாள். 'குஷியாக இரு, அன்பே, இப்படி வருத்தமாக இருக்காதே' என்று கூறினாள் அவள் பீட்டர் வியப்போடு அவளைப் பார்த்தான். அவள் அவனோடு பேசிக்கொண்டிருந்தாள் என்பது சாத்தியமா? அதுவும் ஒரு பெண் - அது சாத்தியமா? மோசமான பெண் என்று ஊர்மக்கள் கூறும் ரகத்தைச் சேர்த்தவள்தான் அவள் என்பது அவனுக்குத் தெரியத்தான் செய்தது, என்றாலும் அவள் தன்னோடு பேசி விட்டாள் என்ற உண்மை அவனுக்கு அசாதாரணமாகத்தான் இருந்தது. அவன் அவளது 'மோசமான நடத்தை'யோடு அவளைச் - சம்பந்தப்படுத்திப் பார்க்கவில்லை. 'என்னோடு வாருங்கள்' என்று குழைந்தாள் அவள். பீட்டர் தலையசைத்தான். இதனை உண்மையென்று அவனால் நம்ப முடியவில்லை . அவள் அவனது கையைப் பிடித்தாள். - 'உங்களிடம் பணம் இருக்கிறதா?' என்று ஆதங்கத்தோடு கேட்டாள் அவள், அவன் மீண்டும் தலையசைத்தான். ' 'உங்களைப் பார்த்தால் ஏதோவொரு சவ அடக்கத்துக்குப் போய்விட்டு வந்தவர் போல் தோன்றுகிறது' என்றாள் அவள். 'நான் தனிமையில் வாடுகிறேன்' என்று விளக்கினான் அவன். அவனுக்கு அழுகை வந்து விடும் போலிருந்தது. அழவும் கூட விரும்பினான். - அழுது ஆறுதல் பெற விரும்பினான். அவன் பேசும்போது அவனது குரல் நடுங்கியது. . 'தனிமையா? வேடிக்கைதான், உங்களைப் போன்ற அழகான வாலிபன் தனிமையில் வாடவேண்டியதேயில்லை' 'அவள் அர்த்தபுஷ்டியோடு, எனினும் குதூகலமற்றுச் சிரித்தாள்...'