பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

புதுமைப்பித்தன் கதைகள்



அவளது படுக்கையறையில் மங்கிய இளஞ்சிவப்பொளி நிலவியது. மலிவான மற்றும் சலவை செய்யாத உள்ளாடையின் மணம் காற்றில் மிதந்தது. கொஞ்சம் பொறுங்கள்' என்று கூறிவிட்டு அவள் வாசல் வழியாக 'உள்ளறைக்குள் சென்று மறைந்தாள். . . அவன் காத்திருந்தவாறே அமர்ந்திருந்தான். ஒரு நிமிடம் கழித்து அவள் ஒரு கிமோனோவையும் படுக்கையறைப் பாதுகைக்ளையும் அணிந்து கொண்டு திரும்பி வந்தாள். அவள் அவனது மடிமீது அமர்ந்து இருகைகளையும் அவனது கழுத்தைச் சுற்றிப்போட்டு, அவனை முத்தமிடத் தொடங்கினாள். 'அன்பே, அன்பே' என்று உடைந்த குரலில் கூறினாள். அவளது கண்கள் உணர்ச்சியற்று இறுகிப் போயிருந்தன. அவளது சுவாசத்தில் சாராய நெடி வீசியது. மிகவும் அருகே பார்த்தபோது, அவள் வருனிக்க முடியாத அளவுக்குக் கோரமாக இருந்தாள். . - பீட்டர் அவளைப் பார்த்தான்; அப்போதுதான் முதன்முறையாக அவளைப் பார்த்து, அவள் எப்படிப்பட்டவள் என்று முற்றிலும் உணர்ந்து கொண்டான். அவன் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். கல்தடுக்கி விழுந்து கணுக்காலைச் சுழுக்கிக் கொண்ட பெரிய மனிதரின் மகளையும், தனிமையில் இருந்த அனாதையையும், குளத்துக்குள் தவறி விழுந்த குழந்தையின் தாயான அந்த விதவையையும், கீச்சுக்குரலியையும் கிசுகிசுக் குரலியையும் நினைவு கூர்ந்த அவன் அவளது கைகளை விடுவித்து விட்டு, அவளைத் தன்னிடமிருந்து தூரத்தள்ளிவிட்டுத் துள்ளியெழுந்தான். 'ஸாரி, நான் போ...போ....க வேண்டும். எதையோ நான் மறந்து விட்டேன்' என்று கூறியவாறு தன்தொப்பியை எடுத்துக் கொண்டு வாசல் நோக்கி நகர்ந்தான். - - அந்தப் பெண் ஓடோடியும் வந்து அவனது கையைப் பற்றிப் பிடித்துக் கொண்டாள். 'நீ... நீ...வாலிபப் பிசாசே!' என்று கூச்சலிட்டாள். அவளது வசைமொழி பயங்கரமாகவும் ஆபாசமாகவும் இருந்தது. 'ஒரு பெண்ணைப் படுக்கக் கூப்பிட்டுவிட்டுப் பிறகு பணம் கொடுக்காமல் வெளியே ஓடப் பார்க்கிறாயா? உன்னை விடமாட்டேன், விடமாட்டேன். - - மீண்டும் அவளது வசைமொழி தொடங்கிவிட்டது