பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு.சி. ரகுநாதன்

45



பீட்டர் பைக்குள் கையை விட்டு, அந்தக் கீச்சுக்குரலி அழகாக மடித்துக் கொடுத்திருந்த பவுண்டு நோட்டை வெளியே எடுத்தான், அதனை அவளிடம் கொடுத்தவாறே, 'என்னைப் போ...க விடு, விடு' என்று கூறினான், அவள் அந்த நோட்டைச் சந்தேகக் கண்ணோடு பிரித்துப்பார்த்துக் - கொண்டிருந்த போது, அவன் கதவைத் தள்ளித் திறந்து கொண்டு வெளியே விரைந்து, படிக்கட்டுகளின் வழியாக இறங்கி வீதிக்குள் ஓடிவிட்டான், | இதுதான் ஆல்ட்ஸ் ஹக்ஸ்லியின் கதை இனி புதுமைப்பித்தனின் 'கவந்தனும் காமனும்' கதைக்கு வருவோம். மூன்று பக்கமேயுள்ள அந்தக் குட்டிக்கதையில், புதுமைப்பித்தன் முதலிரண்டு பக்கங்களில் நாகரிகம் கோலோச்சும் சென்னை நகரத்தின் இரவு நேரத்து ஒளி விளக்குகளின் பிரகாசத்தையும், நாகரிக உலகின் அடிப்படைத் தத்துவமான போட்டி, வேகம் ஆகியவற்றையும், இரும்பு நாகரிகத்தின் சின்னமான டிராம் வண்டிகளின் எக்களிப்புச் சிரிப்பையும் நமக்கு இனம் காட்டிவிட்டு, 'இதுதான் தெரு மூலை. மனித நதியின் கழிப்பு: இது வேறு உலகம்!' என்று இருண்ட சந்து முனையொன்றை சுட்டிக்காட்டுகிறார் இங்கு நடக்கும் விபசாரத்தை, 'அதோ மூலையில் சுவர் அருகில் பார்த்தீர்களா? சிருஷ்டித் தொழில் நடக்கிறது..... நீங்கள் போட்டிருக்கிறீர்களே பாப்லின் ஷர்ட்டு, உங்கள் ஷெல் பிரேம் கண்ணாடி! எல்லாம் அவர்கள் வயிற்றில் இருக்க வேண்டியதைத் திருடியதுதான்!' என்று நம்மிடம் இடித்துக் கூறிவிட்டுக் கதையைத் தொடருகிறார். அந்தப் பகுதி வருமாறு. . தன் நினைவில்லாமலே ஒரு வாலிபன் தெரு வழியாக வருகிறான். களைப்பு, பசி இவை இரண்டுந்தான் அப்போது அவனுக்குத் தெரியும். மனிதனை மிருகமாக்கும் இந்தத் தெரு வழியாகத்தான் அவன் ஆபீஸுக்குச் செல்வது வழக்கம். அந்தப் பெயரற்ற ஆபீஸ், அவனை முப்பது ரூபாய்களுக்குச் சக்கையாகட்ட பிழிந்தெடுத்த பிறகு, இந்த உணர்ச்சிதான் வருமாக்கும் அதோ அந்தப் பெண்ணுடன் இருக்கும் ஒருவன் - இவனை விட அதிகமாகக் கொழுத்த தீனியா தின்கிறான்? அவன் தன்னை மறக்க-யோகிகளைப் போல் அல்ல - குடிக்கிறான். இவனுக்கு அது தெரியாது.