பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு.சி. ரகுநாதன்

47



புதுமைப்பித்தனின் கதை இவ்வாறுதான் முடிகிறது.. ஆல்டஸ் ஹக்ஸ்லி கதையின் முடிவுப் பகுதியையும் பார்த்தோம்; புதுமைப்பித்தன் கதையின் முடிவுப் பகுதியையும் பார்த்தோம். கதைச் சம்பவம் ஹக்ஸ்லியின் கதையிலிருந்து திருடப்பட்டது என்றும், முடிவுப் பகுதி கிட்டத்தட்ட ஒரு மொழி பெயர்ப்பே என்றும் . தேசிகன் கூறியுள்ள குற்றச்சாட்டு சரிதானா? இரண்டு பகுதிகளையும் படித்துப் பார்த்த பின்னர் 'கவந்தனும் காமனும்' ஹக்ஸ்லி கதையின் மொழிபெயர்ப்பு அல்ல, அந்தப் பகுதியின் தழுவல்கூட அல்ல என்பது எவருக்கும் தெரியவரும். . சொல்லப்போனால், இரண்டு கதைகளின் கருப்பொருள்களும வேறுவேறானவை; நோக்கங்களும் வேறு வேறானவை. ஹக்ஸ்லியின் கதையில் வரும் ஏழை வாலிபன் வசந்த பருவத்தில் பூங்காவில் உலாவரும் காதலர்களைக் கண்டு, தன் மீது அன்பு செலுத்தவும் தன்னைக் காதலிக்கவும் எவளாவது பெரிய இடத்துப் பெண்ணொருத்தியோ அல்லது குறைந்தபட்சம் தன்னைப்போல் ஓர் அனாதைப் பெண்ணோ கிடைக்க மாட்டாளா என்ற ஏக்கத்தில், கற்பனைக்காதல் எண்ணங்களில் மூழ்கிச் சுகம் காண்கிறான், அவன் மனத்தில் காதல் பற்றிய எண்ணங்களே மேலோங்கி நிற்கின்றன. இதன்பின் பூங்காவில் நடந்து வந்த இரு செல்வச் செழிப்புமிக்க பெண்களைத் தொடர்ந்து சென்று, அவர்களது அன்பைச் சம்பாதிப்பதற்காக அவர்களுக்கு உதவுவதாக எண்ணி, அவர்களோடு வந்த நாயிடம் கடிபட்டு, இறுதியில் அவமானப்பட்டுத் திரும்புகிறான். இறுதியில் ஒரு சந்து முனை விலைமகள் அவனைச் சந்தித்து. அவனைத் தன் வீட்டுக்கு அழைக்கும்போது, அவள் நடத்தை கெட்டவள் என்று தெரிந்தும், அவளது அழைப்புக்கு உடன்பட்டு, அவளது வீட்டுக்குச் செல்கிறான். அவளோடு உடலுறவு கொள்வதற்கு முன்னர்தான் அவனுக்கு ஞானோதயம் பிறக்கிறது; தான் எதிர்பார்த்த காதலையோ அன்பையோ வழங்கக்கூடியவள் அவளல்ல என்பதை உணர்ந்து, அவளைவிட்டு விலகி, ஓடிவிடுகிறான். புதுமைப்பித்தனின் கதையில் வரும் வாலிபனோ ஹக்ஸ்லி கதையில் வரும் வாலிபனைப்போல் எவளாவது தன்னைக் காதலிக்க வரமாட்டாளா என்று ஏங்கிக் காதல் கற்பனையில் மூழ்கிச் சுகம் காணும் வாலிபன் அல்ல. சக்கையாகப் பிழிந்தெடுத்து வேலை வாங்கிய ஆபிஸிலிருந்து களைப்பு, பசி என்ற இரண்டைத் தவிர