பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு.சி. ரகுநாதன்

49



தேசிகன் இவ்வாறு கூறினார் என்றால் அது விஷமத்தனம் அல்லாமல் வேறென்ன? புதுமைப்பித்தன் கதையின் தலைப்பைப் பற்றிக் கூறும் போது இங்கு இன்னொரு விஷமத்தனத்தையும் சுட்டிக்காட்ட வேண்டும். 1987 ஆம் ஆண்டில் வெளிவந்த புதுமைப்பித்தனின் மொத்தச் சிறுகதைகளின் தொகுப்புக்கு, முன்னுரை எழுதியுள்ள க.நா.சுப்ரமணியம், அதில் ஆல்டஸ் ஹக்ஸ்லியின் கதைகளைத் தனிக்கதைகளாகவும் - தொகுப்புக்களாகவும் , தாமும் புதுமைப் பித்தனும் படித்திருப்பதாகக் கூறியபோதிலும், 'கவந்தனும் காமனும்' கதை ஹக்ஸ்லி கதையின் தழுவல் என்றோ , திருட்டு என்றோ கூற முனையவில்லை. ஆனால் இந்தத் தகவலைக் குறிப்பிட்டுள்ள அதே பக்கத்தில் 'கவந்தனும் காமனும்' என்ற தலைப்பே திருடப்பட்டதுதான் என்று தொனிக்கும் விதத்தில் இவ்வாறு எழுதியுள்ளார் : 14937- 38இல் வெளிவந்த லயனல் பிரிட்டன் எழுதிய லவ் அண்ட் ஹங்கர் என்கிற பெரிய நாவலின் தலைப்பை மாத்திரம் பார்த்துவிட்டு, தன் கதை ஒன்றிற்குத் தலைப்பை, அந்தத் தலைப்பை மாற்றி அழகாக அமைத்து உபயோகித்துக் கொண்டார் - 'கவந்தனும் காமனும்' என்பது அவர் கதையின் - தலைப்பு' (பக். XLIX). , இவ்வாறு எழுதும்போது, 'கவந்தனும் காமனும்' 1940 இல் வெளிவந்த 'புதுமைப்பித்தன் கதைகள்': தொகுதியில் இடம்பெறுவதற்கு முன்பே, நாம் முன்னர் குறிப்பிட்டபடி, வ.ரா.காலத்து மணிக்கொடியில் 1934 இல் (22:7.1934) வெளி வந்திருந்தது என்ற, தமக்கும் தெரிந்த உண்மையை நினைவுகூரக் க.நா.சு.. அடியோடு மறந்துவிட்டார். விஷமத்தனம் தலைதூக்கும்போது விவேகம் கண்ணை மூடிக்கொள்கிறது என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு இது. இல்லாவிட்டால், 1937-38 இல் வெளிவந்த ஒரு நாவலின் தலைப்பை, 'அழகாக மாற்றியமைத்து' புதுமைப்பித்தன் 1934 இல் வெளிவந்த தமது கதைக்குப் பயன்படுத்திக் கொண்டார் என்று க.நா.சு, எழுதியிருப்பாரா? - - சென்னையில் செம்புதாஸ் தெரு வழியாகச் செல்லும்போது, அந்தத் தெருவைக் குறுக்காக வெட்டிச் செல்லும் ஒரு தெருமுனையில் தாமும், புதுமைப்பித்தனும் கண்ட ஒரு காட்சியே, புதுமைப்பித்தனின் 'கவந்தனும் காமனும்' கதைக்கும், தாம் பின்னர் எழுதிய 'கார்னிவல்' என்ற கதைக்கும் பொருளால் அமைந்தது என்ற பி.எஸ். ராமையா