பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

புதுமைப்பித்தன் கதைகள்



தமது 'மணிக்கொடி காலம்' நூலில் எழுதியிருந்ததை முன்னர் பார்த்தோம். இவ்வாறு புதுமைப்பித்தன் எழுதிய கதை மணிக்கொடியில் 1934 ம் ஆண்டிலும், ராமையாவின் கதை. அதன் பின் ஓராண்டுக்கும் மேலான பின்னர், ராமையா காலத்துக் கதைப் பதிப்பு மணிக்கொடியில் 1936 ஆம் ஆண்டிலும் வெளிவந்தன, இருவர் கதைகளுக்கும் இருவரும் கண்ட ஒரே காட்சிதான் பொருளாக அமைந்திருந்தது என்பதால் 'கார்னிவல்' கதையில் ராமையா அந்தக் காட்சியை எவ்வாறு பயன்படுத்தியிருந்தார் என்பதையும் ஒப்பு நோக்குக்காக இங்கு பார்ப்போம். புதுமைப்பித்தன் கதையில் அவர் கண்ட காட்சியே அவரது கதைக்குக் களமாகவும் கருவாகவும் அமைந்தது. ஆனால் புதுமைப்பித்தனின் கதையைப்போல் மூன்று பக்கங்களில் முடியாமல், பதினெட்டரைப் பக்கங்களுக்கு நீண்டிருந்த ராமையாவின் கதையில் அந்தக்காட்சி கதையில் ஒரு முக்கிய அங்கமாக இடம் பெற்றிருக்கிறது. அந்தக் காட்சியை அவர் தம் கதையில் வேறொரு விதத்தில் பயன்படுத்திக் கொண்டிருந்தார். எனவே அவரது கதையம்சத்தை ஓரளவுக்குத் தொட்டுக்காட்டி, குறிப்பிட்ட காட்சி கதையில் இடம்பெறும் பகுதியை மட்டும் சற்று விரிவாகப் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். 'கார்னிவல்' ராமையாவின் சிறந்த கதைகளில் ஒன்றாகும். அக் கதை வனஜா என்ற இளம் வயதுத் தாசிப் பெண்ணின் வாழ்வில், ஒரு நாள் இரவுப் பொழுதில் அவள் பெற்ற அனுபவத்தை அவளது கூற்றாகவே கூறும் விதத்தில் அமைந்த கதையாகும். தாசி வனஜாவின் வீட்டுக்குக் கார் வசதி படைத்த, செல்வ வளம்மிக்க, வாலிப வயது மைனர் ஒருவர் வந்து செல்வது வழக்கம், வனஜாவின் காலிலிருந்து உதிரும் தூசியைக்கூடத் தம் கண்களில் ஒற்றிக் கொள்வதை, சொர்க்கானுபவமாக மதிக்கும் அளவுக்கு அவர் தன்னிடம் மயங்கிப் பிரேமை கொண்டிருக்கிறார் என்றும், அவர் தன்னை ஆட்கொள்ள வந்த எஜமானர் என்றும் வனஜர் எண்ணிக் கொண்டிருந்தாள். மேலும் அவரது பிரேமை உச்சஸ்தாயியை எட்டும்போது, அவர் தன்னைச் செல்லமாக வனீ!' என்று அழைப்பார் என்றும் அவள் தெரிந்து வைத்திருந்தாள். வனஜா வீணை வாசிப்பதிலும், வீணையின் நாதல்யத்தோடு இணைந்து தன்னை மறந்து பாடுவதிலும் வல்லவள். அன்றிரவு