பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு.சி. ரகுநாதன்

51



அவளது வீட்டுக்கு வந்திருந்த அந்த வாலிபர், அவளருகே நெருங்கி, 'வனீ! வீணை வாசியேன்' என்று கொஞ்சினார். அவ்வாறே அவளும் அந்த முன்னிரவு நேரத்தில் தன்னை மறந்து வீணையை வாசித்துப் பாடிக் கொண்டிருந்தாள். அப்போது வீட்டு வாசலில் சில கூலிக்காரர்கள். தமக்குரிய கூலியைக் கொடுக்காமல் தம்மை ஏமாற்றப் பார்த்தவனோடு வாக்குவாதம் செய்து கடுமையாகக் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். இதனால் வீணை இசையும் பாட்டும் நின்று போகின்றன. இதனைக்கண்டு ஆத்திரமடைந்த மைனர், வெளியே விரைந்து சென்று தமது கைப்பிரம்பைச் சுழற்றி, அந்தக் கூலிக்காரர்களை விரட்டியடிக்கிறார். அவர்களும் ஓடி விடுகிறார்கள், இதன்பின் அவர் வனஜாவிடம் 'இந்தத் தடியன்களால் மனசு என்னவோ போலாகிவிட்டது. நமது சுக சங்கீதத்திலே கரகரப்பு தட்டிவிட்டது. எனவே கர்னிவல் ஷோவுக்குப் போய் வருவோம்' என்று கூறுகிறார். தன் எஜமானர் சந்தோஷம்தான் தனது லட்சியம் என்று கருதிக் கொண்டிருந்த வனஜாவும் அதற்கு உடன்பட்டு, "கிங்ஸ் கார்னிவல்ஷோ ' வுக்கு அவருடன் காரில் செல்கிறாள். கார்னிவல் ஷோவிலோ எங்கும் ஒரே இரைச்சல்; ராட்டினங்களில் ஏறிச் சுழலும் மக்களின் கூச்சல்கள், ஆனால் கூலிக்காரர்களின் . சண்டைக் கூச்சலைத் தாங்கமாட்டாமல் அவர்களை விரட்டியடித்த மைனர், கார்னிவல்ஷோவில் தமக்குச் சொந்தமான, இயல்பான ஓர் உலகத்தில் நுழைந்தவர்போல், அந்த ஆரவாரங்களிலும், விளையாட்டுக்களிலும் கலந்து கொள்கிறார். இதைக் கண்ட வனஜாவின் மனம் கலங்கிப்போய்விட்டது; அவளது சுருதி கலைந்துபோய்விட்டது; அதனை மீண்டும் கூட்ட அவளால் இயலவில்லை. இரவு நடுநிசி வேளையில் அவர்கள் இருவரும் அங்கிருந்து காரில் புறப்பட்டபோது, இருவரது மனநிலைகளும் வேறுபட்டிருந்தன. வனஜாவோ கார்னிவல் கூத்துக்களையும் கூச்சலையும் கண்டு வெறுத்துப்போன மனநிலையில் இருந்தாள்; அவரோ கார்னிவலில் அடித்த கூத்தினால் மோகவெறி போதையேறிய நிலையில் இருந்தார். - வரும் வழியில் ஒரு சந்தில் கார் திரும்பியபோது, அங்கு ஒரு மக்கள் கூட்டம் கூடி, காரை முன்னே செல்லவிடாமல் வழியில் குறுக்கே நின்றது. மைனர் காரின் ஹார்னைக் கடூரமாக உரக்க ஒலிக்கச் செய்தும், அவர்கள் நகரவில்லை. இதனைக் கண்டு ஆத்திரமடைந்த