பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு.சி. ரகுநாதன்

53



அந்த நாணயத்தைப் பொறுக்கிக் கொண்டு மறுபுறம் ஓடிவிடுகிறாள். கூட்டமும் கலைந்துவிடுகிறது. மைனர் காருக்குத் திரும்பி வருகிறார். அவர் காரை ஓட்டத் தயாரான வேளையில் அங்கு வந்த இரண்டு போலீஸ்காரர்கள் அவரிடம் வந்து 'என்ன சார் அது?' என்று விசாரிக்கிறார்கள். அவரும். 'வேறே என்ன? சோதாப் பயல்கள். இந்த விபசாரி நாய்களை எல்லாம் பிடித்துப் புளியம் விளாறினால் அடித்து ஊரைவிட்டு ஓட்ட வேண்டும்' என்று கூறிவிட்டுக் காரை ஓட்டிச் செல்கிறார். வீடு திரும்பிய பின் மைனர். மதுவைப் பருகிவிட்டு, 'வனீர் வீணையை எடுத்து அந்தக் கீர்த்தனத்தை முழுவதும் பாடு சைத்தான்கள்! மனசு என்னவோ போலாகிவிட்டது'. ' என்று வனஜாவிடம் கூறுகிறார். - வனஜாவும் முகத்தில் புன்னகையை வரவழைத்துக்கொண்டு வீணையை எடுத்து மீட்டுகிறாள். ஆனால் வீணையின் ஒலியோடு அவளால் லயிக்க முடியவில்லை . விரல்கள் எந்திர கதியில், தந்திகளை மீட்ட, வாய் உணர்ச்சியற்ற இசைத்தட்டைப் போல் பாட்டைப் பாடுகிறது. அந்த இசையோடு அவளால் ஓட்ட முடியவில்லை. இரவு மணி இரண்டு அடிக்கிறது. மதுவை அருந்தி இளம்போதைச் சகத்தில் ஆழ்ந்திருந்த மைனர் தூங்கலாமா என்று கேட்கிறார். அவரைப் படுக்கையில் விட்டுவிட்டு, அவள் ஏதோ அவசிய வேலை --இருப்பதுபோல் அங்குமிங்கும் சென்று பொழுதைக் கடத்துகிறாள். இதற்குள் மைனரும் கண்ணயர்ந்து விடுகிறார். அதுவரை ஏதோ சித்திரவதையை அனுபவிப்பவள்போல் துடித்துக் கொண்டிருந்த வனஜா விடுதலைப் பெருமூச்சுவிடுகிறாள். வீட்டுக்குள் இருப்பது அவளுக்கு மூச்சை அடைப்பது போலிருக்கிறது. எனவே அவள் 6)சயின்றி முன்புறத் தாழ்வாரத்தில் சென்று நிற்கிறாள். குமுறும் நெஞ்சத்தோடு கீழே குனிந்து பார்க்கிறாள். அப்போது அங்கே வீதியின் மூலையில் விளக்கின் அடியில் அவள் கண்ட காட்சி அவள் உடலைக் குலுங்க வைக்கிறது; நாக்கில் க்சட்பு எழச் செய்கிறது. ஏனெனில் அங்கு. அந்தத் தெரு விளக்கின் - அடியில், அந்தப் பெண் - வரும் வழியில் அந்தச் சந்தில் வயிற்றுப் பிழைப்புக்காக நின்றிருந்த அதே பெண் நிற்கக் காண்கிறாள். 4 - -