பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு.சி. ரகுநாதன்

55



1936 இல் மணிக்கொடியில் வெளிவந்ததும், பின்னர் 1944 இல் 'மலரும் மணமும்' என்ற பி. எஸ். ராமையாவின் சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்றதுமான அவரது 'கார்னிவல்' என்ற கதையையும் படித்தே இருப்பார் என்று நாம் கூறலாம். ஆனால் ஆல்டஸ் ஹக்ஸ்லியின் அரைநாள் விடுமுறை' என்ற கதையைப் படித்தபோது. 'கவந்தனும் காமனும்' என்ற புதுமைப்பித்தனின் கதை ஆல்டஸ் ஹக்ஸ்லியின் கதையிலிருந்து திருடியதே என்ற 'உண்மை ' பொறி தட்டிய தேசிகனுக்கு, பி.எஸ். ராமையாவின் 'கார்னிவல்" கதையைப் படித்தபோது மட்டும் அந்தப் பொறிதட்ட மறந்து அல்லது மறுத்துவிட்டது போலும்! இந்நூலின் இரண்டாம் கட்டுரையிலும், இந்தக் கட்டுரையிலும் புதுமைப்பித்தனின் கதைகள் சிலவற்றின்மீது தழுவல் அல்லது திருட்டு முத்திரை குத்தும் நோக்கத்தோடு, தேசிகன் மேற்கொண்ட் விஷமத்தனத்தையே விரிவாக ஆராய்ந்திருக்கிறேன். தேசிகனைப் போலவே புதுமைப்பித்தன் மீது தழுவல் முத்திரை குத்த வேறு சில முயற்சிகளும் நடைபெற்றுள்ளன. அவற்றைக் கூறு முன்பு., புதுமைப்பித்தன் மீது இத்தகைய குற்றங்களைச் சுமத்த முயன்று, 1940 இலும் 1949 இலும் விஷமத்தனம் புரிந்த தேசிகன், இதன் பின் பத்தாண்டுகள் கழித்தும் புதுமைப்பித்தனிடம் குறைகள் காணும் போக்கைக் கைவிடவில்லை என்பதை அடுத்து வரும் கட்டுரையில் எடுத்துக்காட்டிவிட்டு, அதன்பின் புதுமைப் பித்தன் மீது மேலும் சுமத்தப்பட்ட தழுவல் குற்றச்சாட்டுக்களை நாம் ஆராய்வோம்.