பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பின்னணியையும் - விரிவாக எழுதியாக வேண்டும் என்ற உறுதிப்பாடும் எனக்கு ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாகவே நான் பல ஆண்டுகளாக இது சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியில் - ஈடுபட்டிருந்தேன். எனக்கும் இப்போது வயதாகிவிட்டதால், புதுமைப்பித்தன் சம்பந்தமாகவும் அவரது நூல்கள் சம்பந்தமாகவும் எனக்குத் தெரிந்த சில தகவல்களையும், "நான் ஏற்கெனவே திரட்டி வைத்திருந்த ஆதாரங்களையும் இனியும் தாமதப்படுத்தாமல் தமிழ் உலகுக்குத் தெரியப்படுத்தி, சில உண்மைகளைக் கூறியாக வேண்டும் என்ற உந்துதலும் எனக்குத் தோன்றியது. இவற்றின் விளைவே இந்நூலாகும். நான் எந்தவோர் ஆய்வு நூலையும் எழுதத் திட்டமிடும் காலத்தில் அதற்கான சான்றாதாரங்களையும் தேவையான தகவல்களையும் திரட்டுவதற்குத்தான் பல ஆண்டுகளை எடுத்துக் கொள்வேனே தவிர, நூலை எழுதத் தொடங்கிய பின்னர் அதன் பக்க அளவைப் பொறுத்து அதனை ஒரு சில வாரங்களில் அல்லது மாதங்களில் எழுதி முடித்துவிடுவதே எனது நெடுங்காலப் பழக்கமாகும். அதேபோல், இந்நூலைப் புதுமைப்பித்தனின் ஐம்பதாவது நினைவுநாளை ஒட்டி (ஜூன் 30, 1998), புத்தக வடிவில் வெளிக்கொணர வேண்டும் என்ற முனைப்போடு, 1997 தொடக்கத்திலேயே இதளை எழுதத் தொடங்கினேன். ஆனால் முதுமைக்கால நோய்க்கோளாறுகளால் மிகவும் தளர்ந்து நலிவுற்றிருக்கும் என் உடல்நிலை காரணமாக, அந்த நினைவு நாளைத் தாண்டிய பின்னரே இதனை என்னால் எழுதி முடிக்க முடிந்தது, இந்நூலின் முற்பாதியின் முதற்பகுதி புதுமைப்பித்தனின் சொந்தக் கதைகள் சிலவற்றையும் தழுவல் கதைகள் எனக்கூற முற்பட்ட முயற்சிகளை ஆதாரபூர்வமாக ஆராய்ந்து அத்தகைய கூற்றுக்கள் எத்தனை பொய்யானவை என்பதை மெய்ப்பிக்கிறது. இதன்பின் புதுமைப்பித்தன் பெயரால் வெளிவந்த 'புதிய ஒளி', கதைத் தொகுப்பில் மாப்பஸான் தழுவல் கதைகள் சில இடம்பெற நேர்ந்த காரணங்களையும் சூழ்நிலைகளையும் எடுத்துக் கூறுவதோடு, இதனைச் சாக்கிட்டுப் புதுமைப்பித்தன் மீது தழுவல் இலக்கிய கர்த்தா என்ற முத்திரை குத்துவதற்காக எவ்வாறு சில உண்மைகள் திரித்தும் மறைத்தும் கூறப்பட்டுள்ளன எனபது தெளிவாக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் சில கட்டுரைகள் விமர்சனம் என்ற பெயரால், புதுமைப்பித்தனின் சிறப்பையும் சாதனைகளையம் குறைத்து