பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

58 புதுமைப்பித்தன் கதைகள் - - - பாலசுப்பிரமணிய பிள்ளையின மனைவி வள்ளியம்மையாச்சி நேற்றுத்தான் இறந்து போனாள்.... இன்று காடேற்று, நீண்டநாள் வியாதி ஒன்றும் இல்லை. போன சனிக்கிழமை புழக்கடையில் கால் வழுக்கி விழுந்தாள். இடுப்பிலும் விலாவிலும் ஊமையடி, அதில் படுத்தவள் தான். எழுந்திருக்கவேயில்லை' என்று திருநெல்வேலி வழக்கில் மிகவும் சகஜமாகக் கூறும் விதத்தில் கதை தொடங்கும், பின்னர், ஆச்சிக்கு என்ன? கெடப்பிலே கெடந்தாளா என்ன? அண்ணைக்கு என்ன, கால் .... கொஞ்சம் தவறிச்சு. நல்ல ஊமையடி..... இப்படி வரும்னு யார் நெனச்சா.... வயசாச்சில்லியா? எல்லாம் தெய்வ சங்கல்பம். அதுக்கு நாம் என்ன பண்ண முடியும்? ஆச்சி திரேகம் கல்லுன்னா கல்லுத்தான். எண்ணைக்காவது ஒரு நா மண்டையிடின்னு தலையேச் சாச்சிருக்காளா?....' என்று துக்க வீட்டுக்கு வந்தவருக்குக் கள்ளபிரான் பிள்ளை ஆச்சியின் மரணம் பற்றித் திருநெல்வேலி பேச்சுவழக்கில் விளக்கம் கூறுவதும் நமக்குக் கேட்கும் (நினைவுப்பாதை ) அமானுஷ்யத் தன்மையும் மர்மங்களும் நிறைந்து, படிப்பவர் நெஞ்சில் பயானக ரசத்தை எழுப்பும் பிரம்ம ராக்ஷஸ்' என்ற கதையை எழுதும்போது அவர் இவ்வாறு எழுதுவார்: 'அவன் அப்பொழுது நின்ற இடம் ஜடத்தின் சூட்சும ரூபங்களான வாயுக்களும் செல்லக்கூடாத வெறும் சக்திகளே முட்டி மோதிச் சஞ்சரிக்கின்ற, உலக கோளத்தின் மிகவும் சூட்சுமமான ஏழாவது சஞ்சி. அவ்விடத்திலே அவனுக்கு வெகுநேரம் நிற்க முடியாது. ஆனால் சூட்சும - உடலின் இயற்கையால், அடிக்கடி அங்கு உந்தித் தள்ளப்படுவான். சக்திகள், பிரளயம் போலக் கோஷித்து. உருண்டு புரண்டு, சீறிய வித்துப்போல் நடுமையத்தில் கிடக்கும் ஜடத்திற்கு உயிர் அணுக்களை மிகுந்த வேகத்தில் தள்ளும். அவ்விடத்திலே சக்தி அலைகள் நினைவு பிறந்து மடியும் கால எல்லைக்குள் இடைவழித் தேகத்தைக் குழப்பி நசுக்கும் புதிய சக்திகளை அவனது சூட்சும தேகத்தில் ஊட்டி உள்ளே பூமியை நோக்கித் தள்ளிவிடும். புதிய சக்தியூட்டப்பட்ட அவனது சரீரம், ஜடதாதுக்கள் பாசிபோல் உற்பத்தியாகி உரம்பெற்று, கீழ்நோக்கியிறங்கும் இடைச் சந்துகளில் நின்று செக்கச் செவேரென்று எங்கும் பரந்த. நினைவின் எல்லைக்கோடாகக் கிடக்கும் கிரக கோளங்களின் வானப்பாதைகளை நோக்கும், அவனது உருவம் சூட்சும உருவம், அதாவது ஆசையின் வடிவத்தை ஏற்கும் உருவம்,' அவர் கூறும் இந்த வரிகள் புரிந்தாலும் புரியாவிட்டாலும், படிப்பவர் மனத்தில் இவை. ஒரு திகிலையும்