பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொ.மு.சி. ரகுநாதன் --- - - பிரமிப்பையும் ஏற்படுத்தவே செய்யும். அதன் மூலம் பயானக் ரசத்தை எழுப்பும் கதாசிரியரின் நோக்கம் நிறைவேறிவிடும், இவற்றையெல்லாம் விடுத்து, சோழசாம்ராஜ்யப் பின்னணியில் ஒரு கதையை அவர் கூறும்போது சோழமன்னனின் தலைநகர் வருணனையும் பின் வருமாறு கம்பீரம்மிக்க ஒரு நடையில் அமையும்: 'சோழனுடைய தலைநகர் உறையூர். யவன வீரர்கள் இந்து - சீனப் போரில் அவன் படையிலே தங்கள் ரத்தத்தைச் சிந்தினார்கள். அவன் அரண்மனைத் தலை வாயிலைக் காத்திருந்தார்கள்: * 'அகழிக்கப்புறம் அண்ணாந்து பார்த்தால் தலையறுந்து விழுந்து விடும்படி பெரிய வாயில், உள்ளே சற்றுத் தள்ளி, வெண்கலத்தால் ஆன துவஜஸ்தம்பம், அதன் உச்சியில் முன்னங் கால்களை உயரத்தூக்கிக் கொண்டு, வாயைப் பிளந்த வண்ணம் பாயும் நிலையில் வார்த்த வெண்கலப் புலி; முழுதும் தங்கமுலாம் பூசப்பட்டிருக்கிறது. அதன் கண்களுக்கு இரண்டு பெரிய இரத்தினங்கள்! சூரியனின் கிரணங்கள் அதன் மிடுக்கை - சாம்ராஜ்யத்தின் மனப்பான்மையை. தன்னையே வென்று கிழிக்க முயலுவதைப் போல் நிற்கும் புலி - அந்தச் சிற்பியின் கைவன்மையை - எடுத்துக் காட்டின. “ஸ்தம்பத்தின் அடியில் குறுகிய கவசம் அணிந்து, கச்சையைப் போல் வேஷ்டியை இறுக்கிக் கட்டிய மறவர்கள், கையில் எறி ஈட்டிகளை ஏந்திய வண்ணம் கல்லாய்ச் சமைந்தவர்கள்போல் காத்து நிற்கிறார்கள். 'சற்று உள்ளே ராஜமாளிகை. கல்லில் சமைத்து, தமிழனின் மிடுக்கை தமிழனின் வீரத்தை, தமிழனின் இலட்சியத்தை ஒருங்கே எடுத்துக்காட்டுகிறது. எங்கு பார்த்தாலும். ஏகாதிபத்தியச் செருக்கு , சாம்ராஜ்யத்தின். ஹிருதயமின்மை அழகுருவத்தில் மனிதனை மலைக்க வைக்கிறது. மிருகத்தன்மை - அதற்கு வீரம் என்று மரியாதையாகச் சொல்லார்கள் - அழகுடன் கைகோத்து உலாவுகிறது' ('கனவுப் பெண்') இதேபோல் அவர் மாணிக்க வாசகர் காலத்துக்குச் சென்று, சொக்கேசனையும் அங்கயற்கண்ணியையும் கதாபாத்திரங்களாக்கிக் கதை எழுத முனையும்போதேர், அவரது உரைநடை காலிய கம்பீரத்தையும் கனத்தையும் பெற்று விடுகிறது. உதாரணமாக, . சொக்கேசனின் வருகையை எதிர்பார்த்து அங்கயற்கண்ணியான அம்மை மீனாட்சி ஊஞ்சலாடியதைப் புதுமைப்பித்தன் இவ்வாறு