பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

60 புதுமைப்பித்தன் கதைகள் வருணிக்கத் தொடங்கிவிடுகிறார்; - 'மதுரை மூதூரின் கர்ப்பக்கிரஹத்திலே மணியூசலிலே கருங்குயில் ஒன்று உந்தி உந்தி ஆடிக் கொண்டிருந்தது. விளக்கற்ற வெளிச்சத்திலே, புலன்களுக்கு எட்டாத ஒளிப்பிரவாகத்திலே மணியூசல் விசையோடு ஆடியது. அளகச்சுருள் புலன் உணர்வு நுகரும் இருட்டுடன் இருட்டாகப் புரள, கால் விசைத்து, உந்திச் சுழி குழிந்து அலைபோல் உகள, கொங்கைகள் பூரித்து விம்மிக் குலுங்க, அன்னை மணியூசல் ஆடினாள். ஆலவாய் Fஈசன் அழகன் சொக்கன் வருகை நோக்கி மணியூசலாடினாள். தோள் துவள அவள் சங்கிலிகளைப் பற்றி அமர்ந்த பாவனை, சொக்கனை ஆரத் தழுவ, அகங்காட்டும் செயல்போல் அமைந்திருந்தது. அங்கயற்கண்ணியின் அதரத்திலே தீற்றோடிய புன்சிரிப்பு: மருங்கிலே துவட்சி; 'கண்ணிலே விளையாட்டு; நெஞ்சிலே நிறைவு செல்வி மணியூசல் ஆடினாள். ' அண்ட - பகிரண்டங்களையும் சகல சராசரபேதங்கள் யாவற்றையும் தன்னுள் அடக்கும் ஆலிலை வரிவிட்டுப் புரண்டு விளையாடியது. ('அன்று இரவு') இவ்வாறு புதுமைப்பித்தன் தமது கதைகளின் கருத்துக்கும், களத்துக்கும், காலத்துக்கும் பாத்திரங்களுக்கும் இசைந்த நடையில் எழுதிப் பல்வேறு விதமான ரசபாவக் கலவைகளையும் வழங்கிய காரணத்தால்தான் பாரபட்சமற்ற இலக்கிய விமர்சகர்கள், அவரது உரைநடைச் சிறப்பையும் போற்றிப் புகழ்ந்துள்ளனர். - உதாரணமாக, பேராசிரியர் கா. சிவத்தம்பி இவ்வாறு எழுதுகிறார்; இலக்கிய வரலாறு எழுதுவோர் பாலர் இன்று புதமைப்பித்தனது உரைநடைச் சிறப்பிற்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். உரைநடை வரலாற்றில் புதுமைப்பித்தனுக்கு முக்கியமான ஓர் இடம் உண்டு. இலக்கியத்திற்கேற்ற வசனத்தை எழுதியவர் - என்ற பெருமை அவருடையதே...அவரது உரைநடையைப் பற்றித் தானும் பூரணமாக அறிவதற்கு அவரது சிறுகதைகளை அறிதல் வேண்டும்....' (தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். பக்.50) இதன்பின் அவர் புதுமைப்பித்தனின் சிறுகதைகளைப் பற்றி எழுத வரும்போது, 'புதுமைப்பித்தனால் சிறுகதைகள் தமிழ் இலக்கியச் செல்வங்களாகின. திருத்தக்கத் தேவர் தொடங்கிய வடமொழிக் காவிய மரபு எவ்வாறு கம்பனிடத்தில் தமிழாகி, தமிழின் சிகரமாகி, அகில உலகையும் அளந்து நிற்கிறதோ, அவ்வாறே வ.வே.சு. ஐயரால் தொட்ங்கப்பெற்ற சிறுகதை மரபு, புதுமைப்பித்தனிடத்துத் தமிழாகி,