பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

- புதுமைப்பித்தன் கதைகள் இட்டான் என்பதை 'முத்தினான் என்றும், புன்னகை புரிந்தான் என்பதைப் 'புன்னகைத்தான்' என்றும் எழுதுவது வழக்குக்கு வந்துவிட்ட பிறகு, 'கிரீச்சிட்டது என்பதும் வழக்குக்கு வருவதில் தவறு ஒன்றும் இல்லை. என்றாலும் தேசிகன் மேற்கண்டவாறு எழுதிவிட்டுப் பின்வரும் வரியில் ஒவ்வொரு சொற்றொடரிலும் ஓர் அச்ச உணர்ச்சியைக் காட்டுகின்ற இவ்வாசிரியரின் சொல்லாட்சி போற்றற்குரியது' என்று கூறிச் சமாளித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து. வரும் வரிகளோ தேசிகனின் உள் நோக்கத்தை ' - அவரது - மொழியிலேயே சொன்னால் * முரசடிக்காமற் போகவில்லை . 'ஆங்கில இலக்கியத்தில் எப்படி இவ்வாசிரியன் மூழ்கியிருக்கிறார் என்பதைப் பின் வரும் வரிகள் முரசடிக்காமற் போகா' என்று எழுதிவிட்டுப் புதுமைப்பித்தன் கதைகளிலிருந்து பின்வரும் வரிகளை அதற்குச் சான்றாக முன் வைக்கிறார், 1) 'அது உன் சமையல் விமரிசையால் வந்த வினை என்று ஒரு பாரிசத் தாக்குதல் நடத்திவிட்டு எழுந்தேன்'. 2. . 'ஐயோ, அது புன்சிரிப்பா? எலும்பின் செங்குருத்துக்குள் ஐஸ் ஈட்டியைச் செருகியது மாதிரி என்னைக் கொன்று புரட்டியது -3:- 'அவன் மனசில்' பேய்கள் சுதந்தர நடனம் புரிந்தன' 4. 'அவன் மனசில் எரிமலைகள் சீறின' 5. வறண்ட உதடுகளில் சில சமயம் உற்சாக மிகுதியால் களுக்கென்று சிரித்து வெடிப்பு உண்டுபண்ணிக் கொள்வாள்.' 6. 'தெருவில் இருள் விழுங்கிய நாய் ஒன்று உறக்கக் கலக்கத்துடன் ஊளையிட்டு அழுதது. அதன் ஏக்கக்குரல் அலைமேல் அலையாக மேலோங்கி எழுந்து மங்கியது.' 7. 'வைத்த கையை மாற்றாமல் பூதாகாரமாகச் சுவரில் விழுந்த தமது சாயையைப் பார்த்தார். அதன் கைகள் செல்லம்மாள் நெஞ்சத்தைத் தோண்டி உயிரைப் பிடுங்குவனபோல் இருந்தன.' - - 8' மருந்து என்ற சிறிய தடையுத்தரவிற்குப் பயந்து இத்தனை நாட்கள் பதுங்கியிருந்த வியாதிகள் மீண்டும் உறவாட ஆரம்பித்தன'.