பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மதிப்பிட்ட விஷமத்தனங்களை எடுத்துக்காட்டுகின்றன. உண்மையில் இந்த விமர்சனங்களும் - விஷமத்தனங்களும் கடந்த அறுபதாண்டுக்காலத் தமிழ் இலக்கியப் போக்குகளோடும், வஈர்ச்சியோடும், அரசியல், சமூக, பொருளாதார இயக்கங்கள் மற்றும் மாற்றங்கள் ஆகியவற்றோடும், இலக்கியக் கோட்பாடுகள் பற்றிய கருத்துப் போராட்டத்தோடும், ஒருவிதத்தில் இலக்கிய வர்க்கப் போராட்டத்தோடும் சம்பந்தப்பட்டவையாதலால், இந்நூலின் பிற்பாதியிலுள்ள பெரும் பகுதியில், முப்பதாம் ஆண்டுகளில் நடந்து வந்த. மணிக்கொடிப் பத்திரிகையையும், அதில் எழுதிவந்த எழுத்தாளர்களையும் - வரலாற்றியல் பார்வையில், புதிய கோணத்தில் மறுமதிப்பீடும் மறுபரிசீலனையும் செய்யப்பட்டுள்ளது. அடுத்து வரும் கட்டுரை இதே பார்வையில் புதுமைப்பித்தனின் தனிச்சிறப்புக்களையும் தனிப்பெரும் சிறப்பையும் விரிவாக ஆராய்ந்து கூறுகிறது. நூலின் இறுதிப்பகுதி மணிக்கொடி காலத்துக்குப் பின்னர், தமிழ்ச்சிறுகதை உலகிலும், தமிழ்நாட்டிலும் நிகழ்ந்து வந்துள்ள மாற்றங்களைக்கூறி, அவற்றின் பின்னனியில் மேற்கூறிய விமர்சனங்களுக்கும் விஷமத்தனங்களுக்குமான காரணங்களை ஆராய்ந்து கூறுகிறது. இவையனைத்தின் மூலமும், புதுமைப்பித்தன் ரசிகர்களும், தமிழ் இல்க்கிய கர்த்தாக்களும் வாசகர்களும் பல புதிய செய்திகளையும் விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும். - இந்நூலில் புதுமைப்பித்தன் காலத்துக்குப் பின்வந்த தமிழ்ச்சிறுகதை ஆசிரியர்களைப் பற்றிய விமர்சனங்கள் இடம்பெறவில்லையே என்று சிலர் நினைக்கலாம். என்றாலும் இந்நூல் புதுமைப்பித்தனையும் அவரது சமகால எழுத்தாளர்களையும், இவர்களில் சிலர் செய்த விஷமத்தனங்களையும் பற்றிய நூலேயன்றி, சுதந்திரப் பிற்காலத் தமிழ்ச் சிறுகதை உலகம் பற்றிய நூல் அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நூலில் கூறியது கூறலாகச் சில மேற்கோள்களும் விவரங்களும் சில இடங்களில் இடம் பெற்றிருப்பதை வாசகர்கள் உணரலாம்.. ஆனால், அவை : முன்னர் , கூறியவற்றை நினைவூட்டுவதற்காகவும், ஒப்புநோக்குக்காகவும் அல்லது முரண் பாட்டை எடுத்துக்காட்டுவதற்காகவும், அல்லது வேறொரு விஷ்யத்தை வலியுறுத்துவதற்காகவுமே இடம் பெற்றுள்ளன என்பதை வாசகர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.. - இந்நூலை எழுதுவதில் எனக்கு உதவியவர்கள் பலர். இந்நூலை எழுதுவற்கு முன்பிருந்தே எனக்குத் தேவைப்பட்ட சில சந்தேகத்