பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொ.மு.சி. ரகுநாதன் 'தமது உள்ளம் போலக் கொழுந்துவிட்டுப் புகைமண்டிச் சாம்பலையும் புழுதியையும் கக்கும் எரிமலைகளை வலம் வந்து கடந்தார்கள், 'தமது மனம்போல ஓயாது அலைமோதிக் கொண்டு கிடக்கும் சமுத்திரத்தின் கரையை எட்டிப் பின்னிட்டு திரும்பினார்கள். 'தம் வாழ்வின் பால)தபோன்ற மேடு பள்ளங்களைக் வந்துவிட்டார்கள்' மேற்கண்ட வரிகளை மேற்கோள் காட்டிவிட்டுத் தேசிகள் இந்த வரிகளில் பின்வருமாறு குறைகண்டு, அவை படிப்பவருக்கு அருவருப்பைத் தருவதாகக் கூறுகிறார்:

  • இந்த உவமைகளில் ஒரு நயமும் ஒரு சிறப்பும் தோன்றினாலும் வினைகளெல்லாம் ‘கள், கள்' என்று முடிவடைகின்றன. இப்படி வாக்கியங்களை அமைப்பது சற்று அருவருப்பைத் தரத்தான் செய்யும். . .

. . . . . . . . ' . :: . தேசிகனுக்கு அருவருப்பைத் தந்த இந்த வாக்கியங்கள் ‘சாபவிமோசனம்' என்ற கதையில் - எந்த இடத்தில் இடம் பெறுகின்றன என்பதை அவர் குறிப்பிடவில்லை. கல்லாகக் கிடந்த அகலிகை ராமனின் பாதத்தூளி பட்டு சாபவிமோசனம் அடைந்த பின்னர், கோதமனுக்குத் தான் ஏற்றவளா என்ற கவலையோடு அகலிகையும், அகலிகைக்குத் தான் ஏற்றவனா என்ற கவலையோடு கோதமனும் மனநிம்மதியை இழந்து, ராமன் - என்று திரும்பி வருவான் என்ற ஏக்கத்தோடு, பதினான்கு வருடங்களாக இருவரும் காடுமேடெல்லாம் சுற்றித் திரிந்ததைப் பற்றிக் கூற வரும்போது தான் புதுமைப்பித்தன் மேற்கண்ட வாக்கியங்களை எழுதியுள்ளார். அலுப்பும் சலிப்பும். ஊட்டும் அந்த நீண்ட நெடும் பயணத்தை உணர்த்துவதற்காகத்தான், புதுமைப்பித்தன் ஒவ்வொரு வாக்கியத்தையும் ஒரு பாராவாக்கி, 'கள்' என்ற பன்மை விகுதியுடன் முடிவடையும் விதத்தில், ‘தரிசித்தார்கள்', 'தாண்டினார்கள்', 'கடந்தார்கள்', 'திரும்பினார்கள்', 'வந்துவிட்டார்கள்', என்ற வினைச் சொற்களோடு இந்த வாக்கியங்களை எழுதியுள்ளார். இவ்வாறு எழுதுவதே அந்த அலுப்பையும் சலிப்பையும் ரசபாவபூர்வமாக உணர்த்துவதாக அமைந்துவிடுகின்றது. இதற்குப் பதிலாக, 'தரிசித்தனர்', 'தாண்டினர்', 'கடந்தனர்', 'திரும்பினர்', 'வந்துவிட்டனர்' என்று எழுதினால் வாசகனுக்கு அந்த ரசபாலம்