பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

68 புதுமைப்பித்தன் கதைகள் மனத்தில் உறைக்காது. இது தேசிகனுக்கும் புரியாத விஷயமல்ல.' புதுமைப்பித்தனின் உரைநடையில் குறைகளைக் காணவேண்டும் என்ற நோக்கத்தோடு எழுதியதால், அவர் இதனை மூடி மறைத்துவிடுகிறார் என்றாலும், புதுமைப்பித்தனின் வாக்கிய அமைப்புக்கள் அருவருப்பைத் தருவதாகக் கூறும் தமது கூற்றைத் தொடர்ந்து, ஆனால் இரண்டொரு வாக்கியங்களைக் கொண்டு ஒரு நீண்ட புகலரும் சோகத்தையும் தனிமையையும் காட்டுகின்ற இவருடைய ஆற்றலைக்கண்டு நாம் வியக்காமல் இருக்க முடியாது' என்றும் கூறுகிறார். இவ்வாறு கூறும்போது அந்தப் புகலரும் சோகத்தையும் தனிமையையும், பாராக்களாக அமைந்த இந்தத் தனித்தனி வாக்கியங்களின் அமைப்பே புலப்படுத்துகிறது என்பதை - மட்டும் அவர் கூறாது விட்டுவிடுகிறார். இதன்பின் சொற்சிக்கனத்தோடு, உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் கிழட்டுத் துருக்கப் பிச்சைக்காரன் ஒருவனைப் புதுமைப்பித்தன் (மகா மசானம் கதை) நமக்கு இனம் காட்டுவதை எடுத்துக்காட்டிவிட்டு, அவர் இயற்கை எழிலில் எவ்வாறு ஈடுபட்டிருந்தார் என்பதை எடுத்துக்காட்டும் முகமாக, தேசிகன் பின்வரும் வரிகளை மேற்கோள் காட்டுகிறார்: " 'வேனிற்கால ஆரம்பமாகையால், இரண்டாவது அறுவடை சமீபித்துவிட்டது. பயிர்கள் பொன்னிறம் போர்த்து காற்றில் அலைபோல் நிமிர்ந்து விரிந்து ஆகாயத்தில் நடக்கும் இந்திர ஜாலங்களுக்குத் தகுந்த அசைந்தாடும் பொற்பீடமாக விளங்கியது.' : இந்த மேற்கோளைக் காட்டிவிட்டு, இவருடைய சித்திரத்தில் நாம் ஈடுபட்டாலும் பயிர்கள் விளங்கியது என்று இவர் வாக்கியத்தை முடிப்பது நம்மைச் சற்றுத் துயரத்தில் ஆழ்த்தத்தான் செய்யும்' என்று எழுதியுள்ள தேசிகன், புதுமைப்பித்தனின் எழுத்துக்களிலிருந்து மேலும் இரு வாக்கியங்களை மீண்டும் மேற்கோள் காட்டிலிட்டு. இவ்வாறு எழுதியுள்ளார்: 'பன்மை ஒருமை மயக்கம் வந்தால் இதைவிட விசனிக்கத் தகுந்த விஷயம் இல்லை. சிறந்த கற்பனைச் செறிவுக்கிடையே, அற்புதமான சொல்லாட்சிக்கிடையே இத்தகைய வழுக்கள் தோன்றுமாயின், நம்மிடையே ஒரு சோகக் கனலைத்தான் அது எழுப்பும், - புதுமைப்பித்தனின் வாக்கியங்கள் சிலவற்றில் பன்மை ஒருமை மயக்கம் இருப்பது விசனிக்கத்தக்கது என்றும், அது மனத்தில்