பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

'விபரீத ஆசை' - பாளையங்கோட்டை தனித்தமிழ் இலக்கியக் கழகம் கல்லூரி மாணவர்களுக்காக 1976 ஆம் ஆண்டு 'பதுமைப்பித்தன் கதைகள்', என்ற தலைப்பில் ஒரு கட்டுரைப்போட்டி நடத்தியபோது; அதற்குப் - பாராட்டத்தக்க ஒரு சிறு ஆய்வு நூலையே எழுதித் தமது மாணவப் பருவத்திலேயே அந்தப் பரிசைப் பெற்றவரும், அன்றும் இன்றும் புதுமைப்பித்தனிடம் மாறாத ஈடுபாடு கொண்டவருமான கும்பகோணம் வே. மு. பொதிய வெற்பன் தமது சிலிக்குயில் பதிப்பக வெளியீடான பறை -1990 என்ற தொகுப்பு நூலில், 'திருச்சிற்றம்பலக் கவிராயருக்கு ஒரு திறந்த மடல்' என்ற தலைப்பில், புதுமைப்பித்தனின் கதைகள் சிலவற்றின் மீது சிலர் தழுவல் முத்திரை குத்த முயன்று வரும் முயற்சிகளைக் குறித்து என்னிடம் விளக்கம் - கேட்டு ஒரு நீண்ட கடிதம் எழுதியிருந்தார். அதில் அவர் பின்வருமாறு எழுதியிருந்தார். - - சித்தித் தொகுப்பில் உள்ள 'விபரீத ஆசை' நட்ஹாம்சனின் தழுவல் எனவும், அந்தக் கதை மலேசியாவிலோ சிங்கப்பூரிலோ வெளியான ஒரு மலரில் வெளிவந்தது என்றும் திரு.சி.சு.செல்லப்பாநேர்ப்பேச்சில் என்னிடம் தெரிவித்தார்.' - காலச்சுவடு இதழில் (இதழ் 11.1995) புதுமைப்பித்தன் ஆய்வாளரான எம், வேதசகாயகுமார் - - எழுதியிருந்த 'புதுமைப்பித்தன் கதைகளின் கதை' என்ற கட்டுரையைப் படித்துவிட்டு, பொதிய வெற்பன் காலச்சுவடுக்கு எழுதிய ஒரு கட்டுரையில், வேதசகாயகுமாரின் கட்டுரையை ஒட்டி, மேலதிகமான சில தகவல்களை முன்வைத்திருந்தார். , அவற்றில் சி.சு. செல்லப்பாவிடம் தாம் கேட்டறிந்து பறை -1990 இல் வெளியிட்ட தகவலைப் பின்வருமாறு தெரிவித்திருந்தார்: விபரீச ஆசை' நட் ஹாம்சனின் தழுவல் என திரு.சி.சு. செல்லப்பா அவர்கள் நேர்ப்பேச்சில் என்னிடம் குறிப்பிட்டார்.' மேற்குறிப்பிட்ட வேதசகாய குமாரின் கட்டுரையில் (காலச்சுவடு. இதழ் 11.1995) அவர் இவ்வாறு எழுதியிருந்தார்; -