பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொ.மு.சி. ரகுநாதன் புரியவில்லை . என்றாலும், இவர் சி.சு. செல்லப்பா 'விபரீத ஆசை' கதை நட் ஹாம்சன் கதையின் தழுவல் என்று கூறியதை வேதவாக்காகக் கொண்டு, அதனை அப்படியே ஏற்றுக்கொண்டு விட்டார் என்றே ஊகிக்க முடிகிறது விபரீத ஆசை தழுவல் கதையா இல்லையா, செல்லப்பாவின் கூற்று பொய்யா, மெய்யா என்ப்தை ஆராயப் புகுமுன், அறிஞர் வெ.சாமிநாத சர்மா ரங்கூனிலிருந்து நடத்தி வந்த 'ஜோதி'ப் பத்திரிகையில் வெளிவந்த புதுமைப்பித்தனின் கதைகள் மற்றும் அவை சம்பந்தப்பட்ட சில விவரங்கள் ஆகியவற்றை முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தத் தகவல்கள். சிலவற்றை, அறிஞர் வெ.சாமிநாத சர்மாவின் தமிழ்ப்பணி - என்ற தமது நூலில் (பக்.105-106) பாரதி ஆய்வாளரும், சாமிநாத சர்மாவின் நூல்களை மறுபதிப்புக்களாகவும் புதிய பதிப்புக்களாகவும் வெளியிடும் உரிமையைச் சாமிநாத சர்மாவின் இறுதிக்காலத்தில் அவரிடமிருந்து பெற்றவருமான பெ.சு.மணி தெரிவித்துள்ளார். என்றாலும் ஜோதி'யில் வெளிவந்த புதுமைப்பித்தனின் எழுத்துக்கள் பற்றிய முழுவிவரங்களையும் எனக்குத் தெரிவிக்குமாறு அவரிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவர் 'ஜோதி' இதழ்களை மீண்டும் புரட்டிப்பார்த்து 'அந்த விவரங்கள் அனைத்தையும் எனக்குத் தெரிவித்துள்ளார். அந்த விவரங்களை அப்படியே கீழே தருகிறேன்.' .. 1. நியாயந்தான். புதுமைப்பித்தன்', ஜோதி மே 1938: பக்.93 - 96.) புதுமைப்பித்தனின் முதல் கதை 'ஜோதி'யில் இதுதான் என்பதற்குக் கதைக்கு முன் பிரசுரமாகியுள்ள குறிப்பு: சிறு கதைகள் படித்து மன உற்சாகம் பெறுகிற தமிழன்பர்களுக்கு 'புதுமைப்பித்தன்' - புதியவரல்லர். . இவருடைய . கதைகள் ஆழமானவை; கருத்து நிரம்பியவை, இவரை 'ஜோதி' வாசகர்கள் அடிக்கடி சந்திப்பார்கள் என்பதைச் சந்தோஷத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். " (பக்.93) குறிப்பில் எழுதியவர் பெயரில்லை; லெ.சா.வாக இருக்கக்கூடும். 2. உபதேசம் ஒரு சிறுகதை - புதுமைப்பித்தன் ஜோதி, ஜூன் 1938. பக்.117 - 119: