பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

74 புதுமைப்பித்தன் கதைகள் 3. புரட்சி மனப்பான்மை-ஒரு சிறுகதை - 'புதுமைப்பித்தன்' ஜோதி, ஜூலை 1938, பக். 46 - 49, 4, பூச்சாண்டியின் மகள் லூயி கௌப்ரஸ் மொழிபெயர்த்தது. ‘புதுமைப்பித்தன் ஜோதி, ஆகஸ்டு 1938. பக். 50 - 55 இந்தக் கதைக்குப் புதுமைப்பித்தன் முன்னுரையாகப் பின்வரும் குறிப்பை , எழுதியுள்ளார். - - . - 'நீலம் நமக்கு அழகைக் குறிக்கிறது. 'நீலமேகன்" ‘மரகத மேனியான்' என்று நாம் தெய்வங்களை அடைமொழியிட்டு மகிழ்கிறோம். நீலம் சிலரிடை பீதியைக் குறிக்கிறது. கற்பனைப் பொய்க்கனவுகளை சிருஷ்டிக்கிறது. சாதாரணமான, சாதுவான மனிதனுக்கே கோரத்தன்மை ஏற்றுகிறது. 'செம்பட்டைத் தலை * ராட்சதர்களை நம் நினைவுக்குக் கொண்டு வருவதைப்போல், நீலத்தாடி குரூரத்தன்மையுடையதுன்புறுத்துவதால் காம இச்சையைப் பூர்த்தி செய்து கொள்ளும் ஒருவனை மேல்நாட்டுக் கதைகள் கற்பனை செய்கின்றன. காரணம் அவனது நீலத்தாடிதான். இந்த நீலத்தாடி வாலாவின் கதை பல பிரபல எழுத்தானர்களை ஆகர்ஷித்திருக்கிறது. அந்த கோஷ்டியில் மாரில் மாட்டர்லிங் என்ற பெல்ஜிய எழுத்தாளரும் ஒருவர். நீலத்தாடி வாலாவை வைத்து ஓர் அழகிய நாடகமே எழுதியிருக்கிறார். லூயி கெளப்பிரஸ் அந்த ரகத்தைச் சேர்ந்தவரல்ல; இவருக்கு கிண்டல் சுபாவம் மிகவுண்டு, நீலத்தாடி வாலாவின் புத்திரி என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். அதை மொழிபெயர்ப்பது என் உத்தேசம். 'பூர்வ கதை', "நீலத்தாடிவாலா ஓர் பெரிய சுல்தான், அவன் ஏழு முறை கலியாணம் செய்து கொண்டான். ஏழு முறையும் தன் மனைவியின் மீது - பூரண அன்பு செலுத்தி வந்தான், தன். நம்பிக்கைக்குப் பாத்திரமாக்கி - அரண்மனைச் சாவிகளை அவர்களிடம் ஒப்படைத்தான். ஆனால் ஒரு நிபந்தனை. மேலக்கோடியில் இருக்கும் அறையை மட்டிலும் திறந்து பார்க்கப்படாது, மனைவிகள் யாவரும் அதில் என்ன இருக்கிறது என்ற ஆசைக்கு அடிமையாகி, அவன் கோபத்திற்குப் பலியானார்கள். இதுதான் பூர்வகதை. 'லூயி கௌப்பிரஸ் இதைக் கொஞ்சம் மாற்றிப் பின்வருமாறு கதை ஜோடித்திருக்கிறார். புதுமைப்பித்தன்,'