பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொ.மு.சி. ரகுநாதன் 75

  • 5. அபிநவ ஸ்காப் - 'புதுமைப்பித்தன்", ஜோதி, அக்டோபர் 1938 பக். 60 - 63.

6. விபரீத ஆசை - “புதுமைப்பித்தன்", ஜோதி, ஏப்ரல் 1939 பக். 69-72. இவை பெ.சு.மணி எனக்கு அனுப்பியுள்ள அத்தாட்சிபூர்வமான குறிப்புக்கள். மேற்கண்ட கதைகளில் பூச்சாண்டியின் மகள் என்ற புதுமைப்பித்தனின் மொழிபெயர்ப்புக்கதை 1939 இல் நவயுகப் பிரசுராலயம் வெளியிட்ட 'உலகத்துச் சிறுகதைகள்' என்ற புதுமைப்பித்தனின் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளின் தொகுதியில் இடம் பெற்றுள்ளது. ஆனால் 'ஜோதி'யில் அவர் இந்தக் கதைக்கு முன்னுரையாக எழுதிய குறிப்பு அத்தொகுதியில் இடம்பெறவில்லை. பெ.சு. மணியின் ‘அறிஞர் வெ. சாமிநாத சர்மாவின் தமிழ்ப்ப ணி' என்ற நூலில், 1940 இல் நவயுகப் பிரசுராலய வெளியீடாக வந்த 'புதுமைப்பித்தன் கதைகள்' என்ற தொகுதிக்கு 'ஜோதி' மே 1940 இதழில் (பக்.84) வெளிவந்த பின்வரும் விமர்சனமும் இடம் பெற்றுள்ளது: புதுமைப்பித்தனின் கற்பனைகள் உயர்ந்த ரகத்தில் இல்லை. இதனால்தான் இவருடைய கதைகளுக்கு அமையும் பாத்திரங்களும் இவர்களுக்கேற்பட்ட சூழ்நிலைகளும் உண்மையான ரஸானுபவத்திற்கு முரணாயிருக்கின்றன. 'கவந்தனும் காமனும்', 'பொன்னகரம்' முதலிய கதைகள் நம்மால் சகிக்கவே முடியவில்லை . நவீன தமிழ் இலக்கியத்திற்கு, இந்தச் சிறுதைத் தொகுதி சோபையைக் கொடுக்கும் என்று யாராவது கருதுவார்களானால், அவர்களைக் குறித்தும் தமிழ் இலக்கியத்தைக் குறித்தும் நாம் அநுதாபப்படுகிறோம்." மேற்கண்ட விமர்சனம் குறித்த தமது கருத்தை, பெ.சு. மனி எனக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு தெரிவித்திருக்கிறார்,' 'ஜோதி'யில் புதுமைப்பித்தனின் கதைகளுக்கு வந்த விமர்சனம் அமரர் வெ.சா.வால் - எழுதப்பட்டிருக்காது. 'அரு. சொ .' எழுதியிருக்கக்கூடும். புதுமைப்பித்தனின் முதல் கதையை வெளியிட்டபொழுது வெ.சா. எழுதிய குறிப்புரை கவனிக்கத்தக்கது. அரு.சொ. என்று பெ.சு. மணி குறிப்பி சாமிநாதசர்மாவின் நெருங்கிய குடும்ப நண்பராக இருந்தவரும், சர்மாவின், நூல்களை மட்டுமே வெளியிடுவதற்கென, ‘பிரபஞ்ச