பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

16 புதுமைப்பித்தன் கதைகள் ஜோதி பிரசுராலயம்' என்ற பதிப்பகத்தைத் தொடங்கி, 1935 முதல் 1961. வரையில் சர்மாவின் 52-நூல்களை வெளிட்டவருமாவார். மேற்கண்டவற்றிலிருந்து விபரீத ஆசை' என்ற புதுமைப்பித்தனின் கதை மலேசியாவிலோ சிங்கப்பூரிலோ வெளிவந்த ஒரு மலரில் வெளிவந்த கதை என்று சி.சு, செல்லப்பா பொதியவெற்பனிடம் கூறியதும்; வேதசகாயகுமார் எழுதியுள்ளபடி, புதுமைப்பித்தனின் தழுவல் கதைகள் சுக்கிராச்சாரி என்ற புனைபெயரில் ஜோதியில் எழுதப்பட்டவை என்று செல்லப்பா குறிப்பிட்டுள்ளதும் முற்றிலும் தவறானது, பொய்யானது என்பது தெளிவாகிறது. ஏனெனில் முதலாவதாக, - - புதுமைப்பித்தன் மலேசியாவிலிருந்தேர், சிங்கப்பூரிலிருந்தோ-வெளிவந்த எந்தவொரு பத்திரிகைக்கோ, அதன் மலருக்கோ எழுதியதாக ஆதாரமே இல்லை; இரண்டாவதாக, ஜோதியில் வெளிவந்த, புதுமைப்பித்தனின் எந்தவொரு கதையும் "சுக்கிராச்சாரி என்ற புனைபெயரில் வெளிவரவில்லை என்பதை மேலே கண்ட அத்தாட்சிபூர்வமான விவரங்கள் புலப்படுத்தி விடுகின்றன. இங்கு ஒரு கேள்வி எழுகிறது. புதுமைப்பித்தனின் தழுவல் கதைகள் சில சுக்கிராச்சாரி என்ற புனைபெயரில் வெளிவந்தன என்று சி.சு. செல்லப்பா கூறியது. கள ஆய்வின் மூலம் தாம் பெற்ற தகவல்களுக்கு முரணானது என்று கூறவந்த வேதசகாய குமார் தமது கட்டுரையில் சுக்கிராச்சாரி என்ற புனைபெயரில் ஜோதியில் புதுமைப்பித்தனின் எந்தக்கதையும் இடம்பெறவில்லை என்ற உண்மையை வலியுறுத்தாமலும், தழுவல் கதை என்று செல்லப்பர் குறிப்பிட்ட விபரீத ஆசை' என்ற கதை 'புதுமைப்பித்தன்' என்ற பெயரிலேயே வெளிவந்திருந்தது என்ற உண்மையைக் கூறாமலும் விடுத்தது ஏன் என்பதே அந்தக் கேள்வி. அதே கட்டுரையில், புதுமைப்பித்தனின் தழுவல் கதைகள் சில ஊழியன்' பத்திரிகையில் நந்தன், சொ.வி, என்ற புனைபெயர்களில் வெளிவந்தவை என்று எழுதி, தமது சொந்தக் கதைகளுக்காகப் புதுமைப்பித்தன் பனைந்து கொண்ட 'புதுமைப்பித்தன்' என்ற பெயரை அவர் தமது தழுவல் கதைகளுக்குப் பயன்படுத்தவில்லை என்பதை நமக்கு உணர்த்துகின்ற வேதசகாயகுமார், 'ஜோதி' இதழில் 'புதுமைப்பித்தன்' என்ற பெயரிலேயே 'விபரீத ஆசை' கதை வெளிவந்திருந்தது என்ற உண்மையைத் தெரிந்து கொண்டிருந்தும், அது தழுவல் கதை