பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தெளிவுகளையும் விவரங்களையும் கடிதங்களின் மூலம் எனக்குச் சலியாது தெரிவித்துவந்த மூத்த எழுத்தாளர் வல்லிக்கண்ணன் என்வசமில்லாத சிட்டி சுந்தர ராஜனின் 'தமிழ்ச் சிறுகதை: வரலாறும் வளர்ச்சியும்' என்ற நூலை எனக்கு அனுப்பி உதவியதோடு, சென்னை மறைமலையடிகள் நூலகத்திலுள்ள ஊழியன்' பத்திரிகைத் தொகுதிகளிலிருந்து, அவற்றில் வெளிவந்த புதுமைப்பித்தன் எழுத்துக்களைப்பற்றிய விவரங்களைக் குறித்து அனுப்பிய, சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத் துறையைச் சேர்ந்த முனைவர் வீ. அரசு, ஊழியனில் வெளிவந்த புதுமைப்பித்தன் எழுத்துக்களைப் பற்றிய விவரங்களை எனக்குத் தெரிவித்த, தற்போது சென்னையிலுள்ள ரோஜா முத்தையா செட்டியார் ஆராய்ச்சி நூலகத்தின் பொறுப்பாளராக இருந்த அமரர் பி.சங்கரலிங்கம், ரங்கூனில் வெ. சாமிநாத சர்மா நடத்திவந்த 'ஜோதிப் - பத்திரிகையில் வெளிவந்த புதுமைப்பித்தன் எழுத்துக்களையும் எனக்கு எழுதியனுப்பி உதவிய ஆய்வாளர் பெ.சு, மணி, அடையாறு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற 'புதுமைப்பித்தனும் மாப்பசான் கதைகளும்' என்ற இலக்கியக்கூட்டம் பற்றிய முழு விவரங்களையும் எனக்கு அனுப்பி உதவிய, அச் சங்கத்தின் துணைத்தலைவர் முனைவர் கொடுமுடி சண்முகன், ஆங்கிலக் கவிஞர் ராபர்ட் பிரௌளிங்கின் கவிதைத் தொகுதிகளையும், இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ஏ.கே. ராமானுஜத்தின் ஆங்கில நூலையும் என் பார்வைக்குக் கொடுத்துதவிய புனிதர் சேவியர் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் துறையைச் சேர்ந்த முனைவர் நா. ராமச்சந்திரன். எனக்குத் தேவைப்பட்ட ஆல்டஸ் ஹக்ஸ்லியின் கதை மற்றும் காரை, கிருஷ்ணமூர்த்தியின் 'புதுமைப்பித்தன் தழுவற்கதைகள்' என்ற கட்டுரை ஆகியவற்றின் ஜெராக்ஸ் பிரதிகளைப் பெற்றுத்தந்த சுந்தரராமசாமி, புதுமைப்பித்தன் கதைகள் மற்றும் கட்டுரைகள் பலவும் வெளிவந்த தேதிகள் பற்றித் தாம் தயாரித்திருந்த விவரப்பட்டியலை எனக்குத் தந்துதவிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையைச் சேர்ந்த முனைவர் ஆ. இரா.வேங்கடாசலபதி. 'அவளும் அவனும்' என்ற தலைப்பில் வெளிவந்த புதுமைப்பித்தனின் கதைத்தொகுதியை எனக்கு அனுப்பி உதவிய எழுத்தாளர் 'கோணங்கி', புதுமைப்பித்தன் 'சோமு'வுக்கு