பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொ.மு.சி. ரகுநாதன் 77 என்றால் 'புதுமைப்பித்தன்' என்ற புனைபெயரை, புதுமைப்பித்தன் எப்படிப் பயன்படுத்தியிருக்க முடியும் என்று உணராமல் போனது. ஏன்?' | ஏனெனில் விபரீத ஆசை' நட் ஹாம்சன் கதையின் தழுவல் என்று செல்லப்பா கூறியதை அப்படியே அவர் நம்பி ஏற்றுக் கொண்டுவிட்டதுதான் அதற்குக் காரணம். - ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லி வந்தால், கேட்பவன் - அதனை மெய் என்றே நம்பிவிடுவான் என்பது, ஹிட்லரின் பிரசார பீரங்கியாக இருந்து வந்த கோயபெல்ஸ் என்பவனின் சித்தாந்தம். - சி.சு. செல்லப்பா கூறியதை நம்பி, பொதிய வெற்பனும்கூட, புதுமைப்பித்தனைப் பற்றி 1995 இல்தாம் ' எழுதிய கட்டுரை ஒன்றில், “1939 ஏபரல் மாதம் புதுமைப்பித்தனின் 'விபரீத ஆசை' - (நட்ஹாம்கன் கதையின் தழுவல்) வெ.சாமிநாத சர்மா நடத்திய 'ஜோதி' இதழில் வெளியானது என்று அக்கதையைத் தழுவல்கதை என்று . ஏற்றுக்கொண்டே' : எழுதிவிட்டார் (புதுமைப்பித்தன் இலக்கியத் தடம் என்ற நூல். பக். 220). : ... வேத சகாயகுமாரும் சி.சு. செல்லப்பா கூறியதை நம்பி, தமது கட்டுரையில் (காலச்சுவடு - இதழ் 11, 1995) 'விபரீத ஆசை' தழுவல் கதை என்று ஆணித்தரமாகவே எழுதியிருக்கிறார். காலச்சுவடில் (இதழ் 12, 1995). நான் எழுதிய கட்டுரைக்குப் பதில் அளிக்கும் முகமாக, வேதசகாய குமார் காலச்சுவடில் (இதழ் 13, 1996) எழுதிய கட்டுரையில் ஒரு படி மேலே சென்று புதுமைப்பித்தனைப் பற்றிப் பின்வருமாறு எழுதிவிட்டார். * 'இந்தத் தழுவல் பழக்கம் அவரைக் கடைசிவரை விடவே இல்லை ' என்ற க.நா.சு. கூற்றில் ரகுநாதன் குறிப்பிடுவதுபோல அவதூறு எங்கே இருக்கிறது வேதனைதானே மிஞ்சுகிறது. யாத்திரா மார்க்கம் வெளிவருவதன் முன்னால் அவர் எழுதிய தழுவல் கதைகளை விட்டுவிடலாம். தழுவல் குறித்து தன் தெளிவான பார்வையை முன்வைத்த பின் அவர் எழுதிய தழுவல் கதைதான் உறுத்தலாக அமைகிறது. எனவேதான் நேர்மையுடன் 39 இல் அவர் எழுதிய தழுவல் கதையான 'விபரீத ஆசை'யைப் : புதுமைப்பித்தனின் :தழுவலுக்குச் சான்றாக முன் வைத்திருக்கிறேன். மேற்கண்ட வரிகளை எழுதும்போது, அதற்கு முன் தாம் எழுதிய கட்டுரையில் (காலச்சுவடு, இதழ் 11, 1995) புதுமைப்பித்தன்