பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 புதுமைப்பித்தன் கள். அந்தப் பேச்சுக்காக எழுதிய எழுத்துப் பிரதியில் கம்பனைப் பற்றிய இந்த அபிப்பிராயத்தைக் கூறி, 'வயிற் றெரிச்சலிலும் பாட்டுப் பிறக்க முடியும்' என்று குறிப்பிட் iடிருந்தார், புதுமைப்பித்தன், அத்துடன் நில்லாமல் கம்ப னுக்கு ஏற்பட்டதைப்போல், தமக்கேற்பட்ட வயிற் றெரிச்சலையும் ஒரு பாட்டாகச் சொல்ல முடியும் என்பதையும் அத்தாட்சி பூர்வமாக அதில் குறிப்பிட்டிருந்தார். - திருச்சி ரேடியோ நிலையத்தில் பேசவிருந்த புதுமைப் பித்தன் அதற்கு முன்பே காலமாகிவிட்டால்?' என்ற கேள்வியை அவரே எழுப்பிக்கொண்டு, அப்போது, தம் எதிரிகள் எப்படிக் கும்மாளம் அடிப்பார்கள்? 'பய, போயித் தொலைஞ்சானா?' என்று எவ்வளவு நிம்மதியுடன் மூச்சு விடுவார்கள்? புதுமைப்பித்தனின் மிதியடி ஓசையைக் காலனின் அடியோசையாகக் கேட்டுக் கிலியடைந்த இலக் கியப் போலிகள் எப்படி ஆனந்தக் கூத்தாடுவார்கள்? ~~ என்பதை யெல்லாம் கற்பித்துக் கொண்டு, அந்த வேளை' பில் புதுமைப்பித்தனின் நண்பர் ஒருவர் இந்தப் போலி களின் கூத்தைக் கண்டு வயிறெரிந்து, அவர்களைப் பார்த் துப் பாடுவதாக, புதுமைப்பித்தனே ஒரு பாட்டுப் பாடி விட்டார்: திருச்சிக்கு என்றான்; தென் திசைக்கே சென்று விட்டான் கிரிச்சிச் சடாச் சத்தம் கேட்டாயோ?-உரிச்சி வச்ச மடையா? வக்கு அத்த மடையா! எச்சிற் காசு படையாபோ டா? - வயிற்றெரிச்சலின் காரணமாக வல்லின ஓசை செட்டில் அறைந்தாற்போல் உறைத்து விழுவதோடு, எதுகை மோனை இலக்கணங்களும் தட்டழிந்து தடுமாறித் தறிகெட்டுப் போகின்றனவாம். இந்தப் பாட்டுக்கும் திருச்சிக்கும் ஏதோ தெய்வீக சம்பந்தம் இருந்தது போல் புதுமைப்பித்தன் சந்தர்ப்பு பேதத்தால் திருச்சிக்குப் போக முடியவில்லை. அவரது பேச்சும் ஒலிபரப்பப் படவில்லை!