பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 புதுமைப்பித்தன்" இல்லை. தாய்: மாத்திரமே ஜீவிய வந்ததாக இருக்கிறார். கமலாம்பாளுக்கு உடன்பிறந்த சகோதர சகோதரிகள் உண்டு. சகோதரர்கள் இருந்தும் கமலாம்பாளுக்கு எந்தச் அகமும் இன்றும் இல்லை; அன்றும் இருந்ததாகச் சொல்ல முடியாது. சகோதரர்களுக்குள் குடும்பப் பாகப் பிரிவினை வீஷ;யமாகப் பல வருஷ காலமாகக் கோர்ட்டு வாசல் ஏறிக் குலைந்த குடும்பம் அது. புதுமைப்பித்தனின் ஆந்தைகூட, புதுமைப்பித்தன் - செய்துகொண்ட பாகப் பிரிவினை, இந்தக் கோர்ட்டு வழக்கின் எதிரொலிதான் என்று என்னிடம் கூறினார். இந்த மாதிரி நிலைமையில் கமலாம்பாளுக்கு வாழ்வில் அமைதியில்லை. பிறந்த ஊரிலே பிறந்த வீட்டிலே எனக்கு அன்பு இல்லை' என்று புதுமைப்பித்தன் சமயங்களில் மனம் நொந்து 'கூறுவார்; கமலாம்பாளின் நிலையும் அநேகமாக அப்படித்தான், கமலாம்பாள் ஒருத்தி மட்டும்தான் புதுமைப்பித்தனுக்கு ஆறுதலாக இருந்ததாகச் சொல்ல வேண்டும். அவரே கரு முறை தம் மனைவியிடம், 41 கமலா", நீ மட்டும் என் பக்கத்தில் இல்லையென்றால் ' நான். என்ன சம்பாதித்தா ஒம் கடைசியில் பிச்சை எடுக்கும் . ஆண்டியாகத்தான். ஆகிவிடுவேன் என்று கூறினார், புதுமைப்பித்தனோடு குடியும் குடித்தனமுமாய் வாழ்ந்த கமலாம்பாளுக்கோ, அவர் சாகிற வரையிலும் அவரைப் புரிந்துகொள்ள (முடியவில்லை. இலக்கிய ரசிகர்கள் அவரது கதைகளைப் புரிந்து கொள்ள எப்படித் - திணறினார்களோ, அது போலவே கமலாம்பாள் தன் கணவரைப் புரிந்து கொள்ள முடியாமல் திணறினாள், அவருக்கு வாழ்க்கைப் பட்டதிலிருந்து அவரைப் யூரிந்து கொள்ளவே முயன்றேன். அவர் செய்கிற காரி யங்களை மாற்றவும் முற்பட்டேன், வாழ்வை நம்பும்படி யும் விரும்பும்படியும் அவரை நான் தூண்டினேன். என் முயற்சி எதுவுமே அவரிடம் பலிக்கவில்லை. கடைசியில் அவருடன் நான் வாழ்ந்த காலம் முழுவதும், நான் அனுப வித்தது துன்பமா, இன்பமா என்பது எனக்கு அன்றும்