பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 குடும்பமும், குழந்தையும் ஆபீஸில் கேட்டார். “என் பெண்டாட்டி தெருவில் நிற் பதா?' என்று குதித்தார். கடைசியில் அது யார் பிசகும் இல்லை, தம் பிசகுதான் என்பதை உணர்ந்தார், புதுமைப் பித்தன், புதுமைப்பித்தனும் கமலாம்பா (5ளும் கணவன் மனைவி யாகச் சுமார் பதினைந்து வருஷ காலம் வாழ்ந்து வந்தார்கள், என்றாலும் இந்தப் பதினைந்து பதினாறு வருஷ காலத்தில் கமலாம்பாள் புதுமைப்பித்தனை விட்டுப் பிரிந்து பிரசவத் துக்காகவும், ஓய்வுக்காகவும் பல தடவை திருவனந்தபுரம் சென்றதுண்டு. ஊருக்குப் போன மனைவியை லகுவில் போய் அழைத்து வர மாட்டார் புதுமைப்பித்தன். தமது கஷ்டங்களில் தமது மனைவிக்கும் பங்கு கொடுத்துக் கஷ்டப் படுத்த வேண்டாம் என்ற எண்ணமே இதற்குக் காரணம். அவரது மனைவி அவரிடம் எவ்வளவோ கோபித்துக் கொண்டாலும், அதை வகுவில் சமாளித்துச் சிரிக்க வைத்து விடுவார். புதுமைப்பித்தன். அதற்கு ஒரு உதாரணமாக விளங்குவது பின்வரும் கடிதம், புதுமைப் பித்தன் ஊரிலிருந்த தம் மனைவிக்கு 1943-ல் எழுதிய கடிதம் இது: ....நேற்று ஸ்டாம்பு ஒட்டாமல் நீ அனுப்பிய கடிதம் வந்தது. போடு போடு என்று பொரித்துத் தீர்த்து விட்டாய், உனக்கு நான் பணம் அனுப்புகிறேன் என்ற தவணை தவறினால் அதற்கு நான் குற்றவாளியா? கொடுக் கிறவளிடமிருந்து வந்தால் அது உன்னிடம் பறந்து கொண்டு ஓடி வராதா? நீ இன்னும் சிறு பிள்ளை மாதிரி 'டூ' போடுவதில் கெட்டிக்காரி என்பது தவிர வேறு ஒன்று மில்லை. ஸ்ர்... கடிதம் கொண்டு வரும்போதே எனக்குப் பணம் வரவேண்டிய நிலைமையிலிருந்தது. அதனால்தான் பகைத்துடன் கடிதம் எழுதினால் உனக்கு ஏமாற்றமும் கசப்பும் கொஞ்சம் குறையுமே என்றிருந்தேன். அதற்குள் அங்கிருந்து 'டக்'கென்று குண்டு போட்ட மாதிரி ஸ்டாம்பு இல்லாத கடிதம் அனுப்பினாய். அந்தக் கடிதம் வந்தபோது ஆபீஸில் பக்கத்தில் இருந்தவர்கள் * ஊடலோ' என்று சிரித்தார்கள். நானும் சிரித்துக் கொண்டேன். எனக்கு உன்னுடைய 'கடிதத்தைப் பார்த்தவுடன் சிரிப்புத்தான்