பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 புதுமைப்பித்தன் துவிட்டது, சந்தர்ப்பம்",கக் கூட அ புதுமைப்பித்தன் தமது தலைக்குழந்தை இறந்து போன சமயத்தில் ஊருக்குக்கூடப் போக முடியாத நிலைமையி இருந்தார்; பணக் கஷ்டம்தான். அதுபற்றி அவர் என் னிடம் ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டுச் சொன்னார். 'புதுமைப்பித்தன் கதைகள்' வெளிவந்த காலம். அப் RேTது அவரது குழந்தை தவறிவிட்டது. குழந்தையைப் போய்ப் பார்க்கக் கூட அவரிடம் பணவசதி இல்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் அவரது புத்தகத்தை வெளியிட்ட பதிப்பா சிரியர் புதுமைப்பித்தனை அணுகி ஒரு உதவி கோரினார். கம்பெனியில் தமக்குள்ள புற்று வரவுக் கணக்கில் துண்டு விழுவதைச் சரிக் கட்டுவதற்காக புதுமைப்பித்தனிடம் ஒரு நூலின் உரிமையைக் கேட்டார், புதுமைப்பித்தன் அதன்படி ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுக் கொடுத் தார். அதன் பின்னர் வேறொரு சமயம் அதே பதிப்பா சிரியர் புதுமைப்பித்தனிடம் பண உதவி பெறுவதற்காக வந்தார். அப்போது புதுமைப்பித்தனுக்குப் பெருங்கோபம் வந்து விட்டது. அவர் சொன்ன பதில் இதுதான்:

  • * உ.ம்மால் என் பிள்ளையைக் கொன்றேன்.

உமக்காக என் புத்தகத்தைக் கொன்றேன். உமக்காக நான் என்னையே கொன்று கொள்ளத் தயாராயில்லை!” இன்று புதுமைப்பித்தன் கமலாம்பாளுக்கு விட்டுச் சென்றிருக்கும் ஒரு சொத்தான தினகரி சித்திரை வருஷப் பிறப்பன்று பிறந்தாள், அவன் பிறந்தது 1948-ம் வருஷம். அந்தச் சமயத்தில்தான் அவர் சினிமாத் துறையில் பிர வேசித்திருந்தார். 'பிள்ளை பிறந்திருக்கிறது' என்ற தந்தி கிடைத்தபோது நான் அவருடன் இருந்தேன். புதுமைப் பித்தனுக்கு ஒரே கொண்டாட்டம்! ஏராளமான சாமான் களும், பந்து முதலிய விளையாட்டுப் பொருள்களும் வாங் கிக் கொண்டு அன்றிரவே குழந்தையைப் பார்க்கப் புறப்