பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பமும், குழந்தையும் 111 பட்டுப் போனார். இந்தப் பிரசவம் சுகப் பிரசவமா யிருக் குமா என்ற கவலை அவருக்கு ரொம்ப நாட்களாக இருந்த துண்டு. எனவே தந்தி கிடைத்து ஊருக்குக் கிளம்பிய போது குழந்தை பிறந்தது என்பதில் ஒரு சந்தோஷம்; தாயும் சேயும் சௌக்கியமா யிருக்கிறார்களா என்பதை அறிய ஒரு ஆதங்கம். புதுமைப்பித்தன் தமது குழந் தையைப் பார்ப்பதற்காகத் திருவனந்தபுரத்துக்கு, தம் மாமியார் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார், குழந்தையைக் கண்ட உற்சாகத்தில் அவர் எனக்கு ஒரு கடிதம் எழுதினார்: ... நீளமான கடுதாசி எழுதவேண்டும் என்று மனசு வளைகிறது. உடம்புதான் வளையமாட்டேன் என்கிறது: சாப்பிடும் போதெல்லாம் உன்னை நினைத்துக் கொண்டு தான் சாப்பிடுகிறேன். எப்படித்தான் ஒன்றாகக் கட்டிப் புரண்டாலும் வாயும் வயிறும் வேறுதானே! , நேற்று மாலையிலிருந்து நான் கம்யூனிஸ்ட் ராஜாங்க ஏற்பாட் டுக்கு விரோதி. ஏனென்றால், மாமியார் வீடு என்கிற ஒரு Institution அதில் இருக்க முடியாதல்லவா? வெகுதூரம். நொடித்து வதங்கி யாத்திரை செய்து விட்டு வந்தவனுக்கு வென்னீரும் சாப்பாடும் பரமபதமாகத் தோன்றும். அதை மாமியார் வீடு தான் அக்கறையோடு செய்யும். என்ன, தாயர்' வீட்டை மறந்துவிட்டாயா என்று கேட்காதே. தாயார் வீடு பெயலுக்கு இந்த மாதிரி கவனிக்கிற விவகார மாக இருந்தால், தாயார்' மகனைச் செல்லப் பிள்ளையாக நடத்தி ஒன்றுக்கும் ஆகாமல் அடித்து விடுவாள். தாயார் மடி கவலையைப் போக்கலாம். மாமியார் வீடு உடம்பு வலியைப் போக்கி, பூலோகத்தில் தீமைக்கு இடம் எப்படி இருக்க முடியும் என்று நினைக்கப் பண்ணுகிறது. அது தான் மாமியார் வீடு.... “இங்கே உள்ள காரியங்களைப் பற்றி எழுதாமல் கதை வளர்த்தால் உனக்கு நியாயமான கோபம் வரத் தானே செய்யும்! பிரசவம் நான் பயந்து கொண்டிருந்த தற்கு எல்லாம் மாருக, ரொம்ப சுகப் பிரசவம்., குழந்தை சவுக்கியம். காச்சு காச்சு என்று கத்திக் கொண்டிருக் கிறது. இப்பொழுதுதான் ஆஸ்பத்திரியில் விட்டுவிட்டு,