பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“சோவி’’ 11 17 கும், எனவே வாயின் முன்வரிசைப் பற்கள் அநேகமாக வெளியே தெரிந்த வண்ணமே இருக்கும். நெஞ்சு பிரம்புக் கூடை மாதிரி சதைப் பற்றற்று, கூடாடிப்போய் தட்டை யாக இருக்கும். கைகால்கள் எல்லாம் மிகவும் ஒல்லியாகி, வயதுக்கு மீறிய முதுமை தட்டித் தோன்றும், புதுமைப்பித்தன் பேசும்போது தலையை ஆட்டி யாட்டிப் பேசுவார். எதிரிலுள்ளவர்கள் பேசும்போதும் அந்த தலையாட்டம் நிற்காது. ஊமைக் கனவு கண்டு, தலையை ஆட்டிக் கொண்டே இருக்கும் ஓணானைப்போல் இருக்கும், அவரது தலையசைப்பு. தலையசைப்போடு அடிக் கடி தலைமயிரையும் கோதிவிட்டுக் கொள்வார். அவரது வாயில் எப்போதும் சிரிப்பும் சிவப்புமாகவே இருக்கும். வெற்றிலையைப் போட்டு அண்ணாந்து ' இருந்து கொண்டு கடகடவென்று சிரிப்பார், அவரது சிரிப்பு' , பொய்ச் சிரிப் பல்ல, :- மனம் திறந்த பிள்ளைச் சிரிப்பு. எனினும் புதி தாகக் கேட்பவனுக்கு ஒரு கணம் எரிச்சலையோ, அருவருப் பையோ தரும் பேய்ச் சிரிப்பு. வெடிக்க வெடிக்கச் சிரிப் பார், அவரது சிரிப்பு சில நாசூக்கான மேனா மினுக்கிப் பேர்வழிகளுக்குக் ' காட்டுத்தனமான காரியமாகக்கூடத் தோன்றும். அவரது சிரிப்பு வெறும் மகிழ்ச்சியின் அறி குறியாக மட்டும் விளங்குவதில்லை. ' சமயங்களில் தம் முடன் பேசிக்கொண்டிருக்கும் எதிர் 'நபரின்.., அறிவை அளந்து பார்க்கும் அளவு கோலாகவும், எதிரி விடுத்த கேள்விக்கு என்ன பதில் அளிப்பது என்பதை, அடுத்துச் சிந்திக்கும் முயற்சியை வெளிக்குக் காட்டிக்கொள்ளாமல் மறைக்கும் திரையாகவும் பயன்படும். பேச்சு-பேச்சு பேச்சு..எப்போது பார்த்தாலும் அவர் பேச்சிலே சளைக்கமாட்டார். தலைக்குமேல் எழுத்து வேலைகளோ" இதர வேலைகளோ இருந்தாலும்கூடப் பேச் சுக்குமட்டும் பின்வாங்க மாட்டார். சில சமயங்களில் அவருக்குப் புகையிலைக் கமறலாலோ, அதிகப் பேச்சி னாலோ தொண்டை கமறலெடுத்து, இருமலும் புகைச்ச லும் எழும்பி, கண்விழியில் நீர் பிதுங்கும். அப்படி யிருந் தாலும் கூட, இருமல் நின்ற பிறகு ஒரு மடக்குத் தண் ணீர் குடிப்பார், வெற்றிலை போடுவார். மீண்டும் ' பேச் டேபம் தில், சில