பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 புதுமைப்பித்தன் சைத் தொடங்கி விடுவார். அவரோடு பேசிக்கொண் டிருப்பது என்பது ஒரு தனி இன்பம். ஏனெனில் அவ ருடன் பேசும்போது அடிக்கடி வயிறு குலுங்கும்படி நாமும் சிரிக்க ஆரம்பிப்போம். சுவாரசியமான பேச்சாளி. பேசுவதற்கு இதுதான் விஷயம் என்ற நியதி அவரிடம் கிடையாது. பழைய இலக்கியம், புதிய இலக்கியம், சங்கீதம் சோதிடம், சித்த வைத்தியம், சித்தர் பரட்டுக்கள், திருமத் திரம், கம்பரா :.மா.!ணம், காம சம்பந்தமான இலக்கியங் கள் , விவகாரங்கள், ஊர்வம்பு - எதைப் பற்றித்தான் பேசுவது என்பதில்லை. ஒன்றுமற்ற விவகாரத்தைப் பேசினாலும் வாய் ஓயாமல் பேசுவார். அதே மாதிரி, கேட் கிறவர்களின் தலையே கிறுகிறுத்துப் - போகும்படி மிகவும் நுண்மையான அபூர்வமான விஷயங்களையும் தத்துவங் சுளையும் பற்றியும் அவர் பேசுவார். ஒரு தடவை ஐன்ஸ் டீனின் உறவு நிலைத் தத்துவத்தைப் பற்றி என்னிடம் பேசியது எனக்கு இன்னும் ஞாபகமிருக்கிறது. அவருக்கு எல்லா விஷயங்களும் தெரியுமோ இல்லையோ ஆனால், கேட்கிறவர்களிடம் ஆணித்தரமாக அறைந்தாற் போலத் தான் பேசுவார், சோதிடம், வைத்தியம் முதலிய விஷயங் களைப் பற்றிப் பேசும்போது அவருக்கு அதில் மிகுந்த பரிசயமும் நம்பிக்கையும் இருப்பது போலத் தோன்றும். ஒருவனுடைய ஜாதகத்தையே கேந்திர பாத்திரமாகக் கொண்டு ஒரு நாவல் எழுதவேண்டும் என்று அவர் சொல் லிக் கொண்டிருந்தார். அதற்காகத் தமது கதாநாயகனின் வாழ்க்கையைத் தாம் எப்படி எப்படி எழுதத் தீர்மானித் திருந்தாரோ, அதற்கு - ஏற்றபடி அவனது ஜாதகமும் இருக்கவேண்டும் என்று கருதி, ஒரு சோதிடரிடம் பொய் யான ஜாதகக் குறிப்பு ஒன்று . கூடத் தயார் செய்யச் சொல்லியிருந்தார். இதை யெல்லாம் காண்பவர்கள் அவ ருக்குச் சோதிடத்தில், '- வைத்தியத்தில் மிகுந்த ஈடுபாடு இருந்தது என்றே நினைக்கக்கூடும். ஆனால், உண்மையில் அவருக்கு அதில், நம்பிக்கையும் ஈடுபாடும் இருந்ததா என் பது அவரோடு நெருங்கிப் பழகிய என் போன்றவர்க ளுக்கே அன்றும் தெரியவில்லை; இன்றும் தெரியாது.