பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.கா; மீண்டிருந்த 3 பேசி : '* 'சோவி” 119 அவரோடு பேசும்போது அவரைப் பேச விட்டுவிட் டுக் கேட்டுக் கொண்டிருப்பதுதான் நல்லது. எதிராளி ஏதாவது குறுக்கிட்டு வேறு விஷயத்தைப் பேசினால், உடனே தம் பேச்சை நிறுத்தி விடுவார். அவர்கள் : அப்ப டிக் குறுக்கிட்டுப் பேசுவதைக் கேட்டு வருத்தப்பட மாட் டார். அவர்கள், சொல்லும் விஷயத்தையும் கவனித்துக் கேட்பார். குறுக்கிட்டவர் பேசி முடிந்த பிறகு, தாம் பேசிக் கொண்டிருந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடு வார்; மீண்டும் : விட்ட இடத்தில் தொட்டுப் பிடித்துப் பேசும் வழக்கம் அவரிடம் கிடையாது. அதைப் பற்றி எதிராளி நினைவுறுத்தினாலன்றி' அதைப் பற்றிப் பேச மாட்டார்; நினைவுறுத்தியும்கூட, சமயங்களில் அந்தப் பேச்சை அந்தரத்தில் விட்டதோடு நின்று விடுவார். இந்தக் குணத்தை உணராத சிலர் அவரிடம் திடீரென்று தங்களது...ஞான விலாசத்தைக் காட்டிக்கொள்ள எண்ணிக். குறுக்கிட்டுப் பேசி, எத்தனையோ அருமையான விஷயங் களைப் பேசி முடிக்க விடாதபடி, அந்த விஷயங்களைத் திரி சங்கு நிலைக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். அவரது பேச்சு வெறும் பேச்சாகவே இருப்பதில்லை எதைப்பற்றிப் பேசினாலும் மின்னல் வெட்டைப்போல் அபூர்வமான உண்மைகளும், ஆழ்ந்த மேதா விலாசமும், சிறந்த ஹாஸ்யமும் புரண்டு புரண்டு வரும். பேசும்போது அவர் ஆங்கிலம் கலந்துதான் பேசுவார். ஆனால் அவர் பேசுகின்ற தமிழ் அசல் திருநெல்வேலித் தமிழா கவே இருக்கும். அநேகமாக ஊர்விட்டு ஊர்வந்து 'மெட்ரா ஸில்' பழகிப் போனவர்களுக்கு, சென்னைத் தமிழ் முழுக்க முழுக்கப் படியாவிட்டாலும், ஓரளவேனும் அதன் சாயை படிந்து , போவதுண்டு. ஆனால் புதுமைப்பித்தன் திருநெல் வேலியைவிட்டு, சென்னைக்கு வந்த பிறகும் அவர் திருநெல் வேலித் தமிழிலேயே, திருநெல்வேலிப் பண்போடு, பேசுவார். 'ராசா', ', 'அவுஹ', 'வந்தாஹ', 'மேசை'-இதுபோன்ற திருநெல்வேலி உச்சரிப்பே அவரது பேச்சில் ஒலிக்கும். அடிக் கடி 'விவகாரம்', 'இருக்கு', 'Position' முதலிய சில வார்த் மக்கள் அவரது பேச்சில் தலைகாட்டிக் கொண்டே இருக்கும். அவர் நடப்பது ஒரு தினுசாக இருக்கும். மெதுவாகத் தான் நடப்பார். இருந்தாலும் பட்டத்தார், கட்டியவன்