பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 புதுமைப்பித்தன் மாதிரி காலை அகட்டி முன்லேr இழுத்துப் போட்டு, ஓரளவு முன்புறமாகக் குனிந்தவாறே, முட்டப்போகிற கிடாவைப் போல் பாய்ந்து பாய்ந்து நடப்பார். அநேகமாக ரோட்டில் நடந்து செல்லும்போது வேட்டியை மடித்து, திருநெல்வேலிக்காரன் மாதிரி முழங்காலுக்குமேல் கட்டிக் கொள்வார். எதிரே யாராவது நண்பர் வந்தால், அட்ட காசமாகச் சிரித்துக் கொண்டு, தமது ஒல்லிக் கைகளைப் பட்டென்று ஒன்று கூட்டி நமஸ்காரம் செய்வார், எங்கு சென்றாலும், எங்கு உட்கார்ந்தாலும் அவர் உட்காருவது ஆசனத்தைப் பொறுத்ததல்ல், - வீட்டிலே தரையிலே' தாழம்பாய் விரித்து உட்கார்ந்திருந்தாலும் சரி, ஹோட்ட லில் அல்லது ஆபீஸில், அல்லது நண்பர்கள் வீட்டில் நாற்காலி யில் உட்கார்ந்திருந்தாலும் சரி, அவர் சம்மணம் கட்டி சட்ட மாகத்தான்' உட்கார்ந்து பேசுவார். ': நாற்காலியும் தரையும், அவருக்கு இது விஷயத்தில் ஒன்றுபோலத்தான் பயன்படும். புதுமைப்பித்தன் இரவு எவ்வளவு நேரம் கண் விழித் தாலும் சரி, அதிகாலையிலேயே எழுந்துவிடுவார், இரண்டு நாட்களுக்கு ஒருதரம் காலையில் எழுந்தவுடனேயே 'முதல் சோலியாக க்ஷவரம் செய்து கொள்வார். பிறகு பல் தேய்க் கச் சென்றால் அவருக்குச் சுமார் அரைமணி நேரம் பிடிச் கும். டூத் பேஸ்ட்; இல்லையென்றால் கருவேலம் பற்பொடி.. எதையாவது சிவத்துப் பல்லை விளக்கி விளக்கி, வெற்றி லைக் காவியைப் போக்க முனைவார். பிறகு தென்னம் சர்க்கியைக் கொண்டு நாக்கை வழித்து விடுவார். அது ஒரு பயங்கரமான காட்சி, ஓங்கரிப்பும் வறட்டு வாந்தி யும் இருமலும் கிளம்பும்; கண் விழி பிதுங்கி நீர் 'தெறிக் கும். என்றாலும் பல் தேய்ப்பது என்பது அவ்ரைப் பொறுத்தவரையில் அப்படிப்பட்ட காரியம். பிறகு குளிக்கப் போவதற்கு முன்னால், ஏதாவது மூலிகைத் தைலத்தைத் தலையில் அரக்கி இறக்குவார்; கால் கையிலும் எண்ணெய் தடவிக் கொள்வார். குளிக்கும்போது சோப்பு மட்டும் அல்லாமல், பீர்க்கங் கூடு, சீயக்காய்ப் பொடி' முத் லியவற்றையும் உபயோகித்துக் கொள்வதுண்டு. சாலையி லேயே குளித்துவிட்டு, ஒரே ஒரு சிட்டுத் துண்டை மட்டும் அரையில் கட்டிக் கொண்டு சட்டமாக வந்து உட்கார்ந்து