பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
    • சோவி

185 மாதிரியும் வேலை செய்வதுண்டு;- கும்பகர்ணனைப்போல், மாதக் கணக்கில் தூங்கிக் கிடப்பதும் உண்டு, லேசில் பேனாவை எடுக்க மாட்டார்; எடுத்தால் சீக்கிரத்தில் வைக்கவும் மாட்டார். இவரிடம் யாரேனும் வந்து கதை. கேட்டுவிட்டு, இவர் சொல்லும் வாக்குறுதியை நம்பி 'அடுத்த இதழில் புதுமைப்பித்தன் கதை' என்று விளம் பரப்படுத்தியும். 'கபிடுவார்கள். அப்புறம் அவர்கள் புதுமைப் பித்தனிடம் நடையாய் நடந்து தான் கதை' பெறவேண் . டும்; அப்படி 'கர்ம யாத்திரை செய்தும்கூட, சமயங்களில் பலன் கிட்டாமல் போய் விடுவதுண்டு. ஆனால் கதைக்காக ஆசாமி வந்து நெருக்குகிறான் என்பதற்காக அவர் காமா சோமாவென்று எதையேனும் - எழுதித் தள்ள நினைக்க மாட்டார், அவரது எழுத்துக்களில் கர்ம சிரத்தையும் மதிப் பும் நாணயமும் அவருக்கே உண்டு. கதை கேட்டு வரும் ஆசிரியரிடம் எவ்வளவு தூரம் முதுகை நெளித்துக் கொடுத் துத் தாமதப்படுத்தி ஏமாற்ற முடியுமோ, அவ்வளவும் செய்து பார்ப்பார். எழுதாமல் தீராது என்ற நிலைமைக்கு வந்துவிட்டால், அதன் பிறகு அவர் புதுமைப்பித்தனல்ல; பூதமாகவே மாறி வேலை செய்வார், கதை கொடுக்காமல் ஏமாற்றுவதைப் பார்த்து அவரிடம் அதைப்பற்றிக் கேட் டால், * *ஐயாவிடம் கதை வாங்கி றது. என்றால் லேசா? கொஞ்சம் அலைந்துதான் வாங்கட்டுமே! என்பார். ஆனால் அவர்களை அலைய வைக்க வேண்டும் என்ற எண்ணமே அவ ருக்குக் கிடையாது;, சோம்பேறித் தனத்துக்கு வக்காலத்து வாங்கும் சப்பைக்கட்டாகத்தான் அந்தப் பேச்சு விளங்கும். கதை வாங்க வரும் ஆசிரியர்கள் என்ன ஸார், கதையைத் தீர்மானித்து விட்டீர்கள் அல்லவா? இல்லை. அதுவே இனி மேல்தானா? என்று கேட்டால், உண்மையில் கதை எது வும் தீர்மானித்து வைத்திரா விட்டாலும். **அதெல்லாம் மனசுக்குள்ளே இருக்கு. எழுத வேண்டியதுதான்” என்று கூறிக்கொண்டே, அந்த - கூடிணத்திலே எதிராளிக்குப் புரியாத வகையில் ஒரு கதை சொல்ல ஆரம்பித்து விடுவார். வந்தவர் 'சரிதான், இனி கிடைத்துவிடும்' என்று நினைத் துக்கொண்டு புறப்படுவார்; அவருக்குப் பின்னாலேயே அந்தக் கதையும் காற்றோடு கலந்து புறப்பட்டுப் போய் விடும்.