பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தன் சரீ" என்ருர் சிதம்பரம். ""சரி, எடு தாளை, எடு பேனாவை. சொல்லச் சொல்) எழுதிக் கொண்டே வா என்றார் புதுமைப்பித்தன், புதுமைப்பித்தன் சொன்னார்; சிதம்பரம் எழுதினார். அப்போது அவர் எழுதிய அந்தக் கட்டுரைதான் “பாட்டும் அதன் பாதையும்' என்பது. கட்டுரை முடிவை நெருங்கும் சமயத்தில் புதுமைப் பித்தன் வெற்றிலையைப் போட்டுக் கொண்டு, மீண்டும் கட்டுரையைத் தொடங்கினார். ஆனால் கட்டுரையின் போக் குக்கு மீண்டும் தடையேற்பட்டு விட்டது. தம்பி தம்பி! கொஞ்சம் நில்லு. கட்டுரை பாதியி லேயே நிற்கட்டும், ஒரு பாட்டு வருது. எழுதிக்கோ ? என்றார் புதுமைப்பித்தன். (* காளான் குடை நிழலில் கரப்பால் அரசிருக்க வேனான் குடியூசில் வெள்ளெருக்கம் ஒட்டருகே.... விறு விறு என்று சுமார் முப்பது வரிகள் - வரையிலும் பாட்டு தட்டுத் தடங்கலில்லாமல் சென்றது; பிறகு பாட் டும் தடைப்பட்டு நின்றது. “'பாட்டு ஸ்டாக் தீர்ந்து போச்சு. இனி கட்டுரையை எடு என்றார் புதுமைப்பித்தன், அன்று கட்டுரை முடிந்தது; மறு நாள் பாட்டும் முடிந் தது. அந்தப் பாட்டுத்தான் கவிக்குயில் மலரில் வெளி வத்த 'மகா காவியம்' என்பது. நண்பர் கு. அழகிரிசாமி புதுமைப்பித்தனைப் பற்றிய ஒரு கட்டுரையில் அவருடைய கதைகளில் நமக்கு எவ்வளவு மதிப்பு உண்டோ அவ்வளவு மதிப்பு அவ குக்கும் உண்டு என்று குறிப்பிட்டிருக்கிறார். , 'புது மைப்பித்தலுக்குத் தமது எழுத்துக்களில் மிகுந்த ஈடுபாடு. தம்முடைய கதைகளை அவர் குழந்தைகளைப் போல் புனித