பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134) புதுமைப்பித்தன் சொரூபம், உண்மை கறைபட்டோ திரைபட்டோ மூடிப் போகாதது. எனவே அந்தக் கதையில் புதுமைப்பித்தன் சரஸ் வதியைத் திகம்பர செ: ரூபமாகவே வருணித்திருந்தார். பயங் கரமான, கொஞ்சம் கண்ணைச் சுழித்துப் பார்க்க வேண்டிய கற்பனைதான்.. வந்தவர்களிடம் புதுமைப்பித்தன் அந்தக் கதையைப் படித்துக் காண்பித்தார். வந்தவர்கள் திடுக்கிட்டுப் போனார்கள். கடைசியில் போகும்போது, அவர்கள் புதுமைப் பித்தனிடம் அந்த எழுத்துப் பிரதியை வாங்கிப் பார்த்தார்கள். அந்தப் 13யங்கரமான கற்பனையைக் கண்டு, தமதும் உள்ளத்தில் எழுந்த ஆத்திரத்தில் அந்தப் பிரதியைக் கிழித்துத் தும்பு தும்பாக்கி விட்டெறிந்து விட்டு, என்னய்யா இது, வேறு ஏதாவது எழுதக் கூடாதா? இதுதானா கிடைத்தது? என்று சொல்லிக் கொண்டார்கள், புதுமைப்பித்தனுக்கோ உள்ளூரப் பெருங்கோபம் கிளர்ந் தது. இருப்பினும் அ43) த வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. “'கிழித்துத்தானே போட்டீர்கள். ஒரு குழந்தையைக் கொன்றுவிட்டீர்கள், ஆனால், ஒன்று ஞாபகமிருக்கட்டும். நான் ஒன்றும் மலடு அல்ல. இதைவிடப் பலம் பொருந்திய குழந்தையை என்னால் பெறமுடியும். ' போய் வாருங்கள் என்று கூறி அவர்களை வழியனுப்பி வைத்து விட்டார். ஆனால் அதன் பிறகு துரதிருஷ்ட. வசமரக அந்தப் 'பலம் பொருந்திய குழந்தை பிறக்கவே இல்லை. புதுமைப்பித்தன் தமது கதைகளை யாராவது விமர்சனம் செய்தால், அதிலும் விமர்சனம் செய்கின்ற நபர் தகுதியுள்ள நபராக இருந்தால்தான், அதைக் காது . கொடுத்துக் கேட் பார். யாராவது அவரிடம் வந்து முகஸ்துதிக்காக, * *ஸார், டங்கள் கதை அற்புதம், அபாரம்! என்று வாய்ப்பந்தல் வீசினால் அதைப் புரிந்துகொண்டு அதற்குத் தக்கபடி அவர் பதில் கொடுப்பார், “வே, தாம் எழுதுவது நல்லா இராமே, வேறுவிதமாக, இருக்க முடியாது. ஆகவே நல்லா இருக்கு என்று சொல்