பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'சோவி' > 135 வதே தப்பு. என்னைக் காலைவாரி விடப் பார்க்காதேயும். போய்வாரும்" என்று கூறி விரட்டி விடுவார். சிலர் புதுமைப்பித்தனின் கதை எதையாவது எடுத்து வைத்துக்கொண்டு, தாங்கள் என்னவோ இலக்கியத்தில் அக்கரை இக்கரை கண்டவர்கள் 20 திரி பாவனை செய்து கொண்டு' * *ஸார், உங்க கதை புரியலையே? என்று கூறி அவரது 'கதையின் மதிப்பைக் குறைக்க முயல்வார்கள், அப்படிக் கூறுகிறவர்களிடம் " 'ஸார், இது உமக்காக எழுதவில்லையே? என்று கூறி மடக்கி விடுவார் புதுமைப் பித்தன், இதனால் புதுமைப்பித்தன் தமது கதைகளைப் பற்றி அபிப்பிராயம் சொல்லவோ, அபிப்பிராயத்தை ஏற்கவோ மாட்டார் என்று. சிலர் தவறாக எண்ணியதுண்டு. உண்மை அதுவல்ல. நேர்மையோடு, உண்மையோடு, ஈடுபாட்டோடு உணர்ந்து பேசுகிறவர்களிடம் அவரும் " முகம் கொடுத்து" ஒழுங்காகப் பேசுவார், என்னிடமும் வேறு சில நண்பர் களிடமும் புதுமைப்பித்தன் அந்த மாதிரிப் பேசியதுண்டு, புதுமைப்பித்தனைப் பற்றிச் சிலருக்கு இன்னொரு அபிப்பிராயமும் இருந்து வந்ததுண்டு. அவர் ஒரு முசுறுக். குணப் பிறவி. அவரோடு பாரையா பழகுவான்?' என்று கூட றியவர்களும் உண்டு. உண்மையில் அப்படிக் கருதியம் வர்கள் புதுமைப்பித்தனைச் சரியாக உணர்ந்து கொள்ள வில்லை என்றுதான் அர்த்தம். அவர் பாட்டுப் பட்டென்று எதையும் பொட்டிப் பேசுவதைக் கண்டு, அதைத் தாங்க முடியாது ஒதுங்கிப் போனவர்கள்தாம் இந்த மாதிரிச் சொல்லிக் கொண்டார்கள். உண்மையில் புதுமைப்பித்தன் எல்லோருடனும் நெருங்கிப் பழகுவார், இன பேதம், மொழி பேதம், மத பேதம் என்று எந்தவித பேதத்தையும் கவனியாது இவர் பழகுவார். வகுப்புவாதிகளிலும் அவ ருக்கு இருபுறத்து நண்பர்களும் இருந்தார்கள். ஆனால் புதுமைப்பித்தனுக்குப் பிடிக்காதவர்கள் சிலர் உண்டு. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்கள், சுய விளம்பர ஆசாமிகள், முகஸ்துதிக்காரர்கள், திருட்டு இலக்கிய கர்த்தாக்கள், காக்காய் பிடிப்பவர்கள் - இப்படிப்