பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தன் பட்டவர்களைத்தான் புதுமைப்பித்தனுக்குப் பிடிக்காது இப்படிப்பட்ட ஆசாமிகளுக்குப் புதுமைப்பித்தன் - வைக் கின்ற பெயர்கள்கூட விசித்திரமா யிருக்கும். திருட்டு இலக் கியம் செய்கிறவர்களைப் புதுமைப்பித்தன் காட்டிக்கொடுப் பார். எதிர்த்துட்ட போராடுவார். புதுமைப்பித்தன் இப்படிப் பட்டவர்களைச் சந்திக்க நேர்ந்தாலும், அப்போது தம் மனசிலுள்ளதைப் பட்டவர்த்தனமாக மூஞ்சியில் அடித் தாற்போல் கூறிவிடுவார். அவர்களைத் தாம் வைத்திருக்கும் வட்டப் பெயர்களைச் சொல்லியே கூப்பிடுவார். எதிராளி முகம் கோணுவானே என்று கூடப் பார்க்க மாட்டார், யாராவது ஏதாவது ஒரு விஷயத்துக்குச் சப்பைக்கட்டுக் கட்டினால், என்னவே, பாத்தி பிடித்துப் பம்மாத்துப் பண்ணுதே?” என்று நேராகவே கேட்டு விடுவார். இத னால்தான் அவரோடு பழகுவதற்குப் பலர் பயந்து ஒதுங்கி 6னர்கள் என்று சொல்லவேண்டும், உண்மையில் புதுமைப்பித்தன் மிகவும் இளகிய மனம். கொண்டவர். பேச்சுத்தான் காரசாரமா யிருக்குமே ஒழிய பழகும்போது வஞ்சனையின்றி, கள்ளங் கவடின்றிப் பேசு வார்; பழகுவார். அவருக்கு யாருடன்தான் பழகவேண்டும் என்ற நியதி கிடையாது. மனித குலத்தின் சகல பிரிவின ஏருடனும் அவர் பழகுவார், மனைவியிடம் எவ்வளவு சுதந்திர மரகவும் பிரியமாகவும் பழகுவாரோ, அதே பிரியத்துடன் ரிக்ஷாக்காரனிடமும் பழகுவார். தாம் சாப்பிடும் ஹோட்டல் ஸெர்வர்களோடும் குஷாலாகப் பேசுவார்; முதலாளியுடனும் பேசுவார்; வெளியே வெற்றிலைப் பாக்குக் கடைக்காரனிடம் அவனது க்ஷேம் ,லாங்களை விசாரித்து அன்போடு பேசுவார். எனவே வாழ்க்கையின் இடைநிலையில் துயரப்படும் - (மனிதர்கள்கூட, புதுமைப்பித்த னிடம் பேசுவதில் ஆனந்தம் கொள்வார்கள். ரிக்ஷாக் காரன் உரிமையோடு வந்து, * 'ஸாமி, நாஸ்டா பண்ணலே. நாலணா குடு ஸாமி. ஸவாரிலே கழிச்சிக்கோ என்று கேட் Lசான். அவனுக்குக் காசு கொடுப்பார். ஒரு தடவை ரா&... ' பேட்டை டிராம் ஷெட் அருகிலுள்ள ரிக்ஷாக்காரன் இரவு பத்து மணிக்கு, புதுமைப்பித்தன் வீட்டு ஜன்ன லருகே வந்து நின்று எலாமி, ஒண்ணுமே துண்ணாலே.