பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 புதுமைப்பித்தன் தம்மை எதிர்த்து எழுதியிருந்தாலும்கூட சூட்டிக் கொள்ள விரும்புவார். இதுபோலவே நண்பர் அழகிரிசாமியைப் புதுமைப்பித்தனுக்கு நாள் அறிமுகப்படுத்தி வைத்த சில நாட்களில், அழகிரிசாமியின் 'வெந்தழலால் வேகாது' என் ) கதையைப் பற்றிப் புதுமைப்பித்தனிடம் சொன்னேன். கதை அவருக்குப் பிடித்துப் போய்விட்டது. 'கதையைக் கொண்டா” 6என்று கட்டளையிட்டார். மறுநாள் அழகிரிசாமியும் நானும் அந்தக் கதையுமாக அவர் வீட்டுக்குப் போனோம், கதையைக் படித்து மகிழ்ந்த புதுமைப்பித்தன் தாமே அந்தக் கதையை “ கலைமகள்' பத்திரிகைக்குக் கொண்டு சென்று வெளியிடச் செய்தார். இதுபோலவே எனது 'வென்றிலன் என்ற போதும்' என்ற கதையைத் தமது - பத்திரிகையில் வெளியிட விரும்பி ஒரு பத்திரிகாசிரிய நண்பர் என்னிடம் -அதாவது புதுமைப் பித்தன் வீட்டில் நானும் புதுமைப்பித்தனும் அந்தக் கதை qடன் இருக்கும்போது- வந்துசேர்த்தார். கதை நல்ல கதை; கொஞ்சம் நீளமான கதை. ஒரே இதழில் வெளியிட்டால். பதினாறு பக்கங்களுக்குக் குறையாமல் வரும். எனவே பத்திரி காசிரியர் அந்தக் கதையை இரண்டு இதழ்களில் வெளியிடுவ தாகச் சொன்னார். ஒரே இதழில் வெளியிடா விட்டால் கதையின் ஒருமையும் சுவாரசியமும் கெட்டுப்போகும் என்பது எங்கள் கட்சி. ஆனால் அந்த ஆசிரியரோ ஒரு பெண் எழுத்தாளரின் கதை அந்த இதழில் வரவேண்டியிருப்பதால் ஒரே இதழில் போட இடமில்லை என்றார். அந்தப் பெண் எழுத்தாளரோ எல்லாப் பெண் எழுத்தாளர்களையும் போலவே சாதாரணமான இரண்டாம் தரக் கதைகளை எழுதுபவர். புதுமைப்பித்தனுக்கு ஒரே ஆத்திரம். * * நல்ல கதை வேண்டுமென்றால் ஒரே இதழில் போடு, இல்லாவிட்டால், அந்த அம்மாளின் கதையைப் போட்டு, மீதிப் பக்கத்திலே பெருக்கல் வாய்ப்பாடு அச்சடித்து விடு. எல்லாம் ஒன்றுதான்! என்று சீறிவிட்டார். வந்தவருக்கு முகம் சுண்டிவிட்டது. எழுந்து போய் விட்டார். இந்தச் சம்பவங்களினால் எல்லாம் புதுமைப்பித்தன் திறமை இருப்பவர்களை ஆதரிக்க வேண்டும், கை தூக்கி