பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குல் முறை எனவே அந்தத் துரை உலகளந்த பெருமாள், பிள்ளைக்கு, தான் ஆட்சி புரிந்த ஊரின் பெயரையே சூட்டிக்கொள்ளும்படி உத்தரவிட்டான். பிள்ளையவர் களும் துரை தமக்கு அளித்த பதவியின் ஞாபகார்த்தமாக அந்தத் திருநாமகரணத்தை ஒரு சன்னத்தாகவே பாதித்து ஏற்றுக்கொண்டார்; விருத்தாசலம். பிள்ளையாகிவிட்டார். இந்த விருத்தாசலம் பிள்ளையின் பேரனுக்குப் பேரனாகப் பிறந்தவரே, சொ. விருத்தாசலம்-அதாவது புதுமைப் பித்தன் புதுமைப்பித்தனின் முப்பாட்டனார், துரையின் உத்தரவுக்காகத் தம் பெயரை விருத்தாசலம் என்று மாற்றிக்கொண்டார்; சொ. விருத்தாசல்மோ கதை எழுது வதற்காகத் தம் பெயரைப் 'புதுமைப்பித்தன்” என்று மாற்றிக்கொண்டுவிட்டார்! உலகளந்த பெருமாள் பிள்ளையின் காலம் தொட்டு அவரது வம்ச பரம்பரையார் சர்க்கார் ரெவீனியூ இலாகா வில். பரம்பரையாக உத்தியோகம் பெற்று, ராஜ விசுவாசத் தோடு வாழ்ந்து வந்தனர். புதுமைப்பித்தனின் பாட்ட னாரும், உலகளந்த பெருமாள் பிள்ளையின் பேரனுமான விருத்தாசலம் பிள்ளை என்பவருக்கும், அவரது மனைவி அழகம்மை என்னும் அம்மையாருக்கும் பிறந்தவரே சொக்கலிங்கம் பிள்ளை; புதுமைப்பித்தனின். தந்தை. சொக்கலிங்கம் பிள்ளை படித்து பி. ஏ, பட்டம் பெற்று, பர்வதத்தம்மாள் என்பவரை மணம் செய்து கொண்டார். அப்போது அவர் தென்னாற்காடு ஜில்லாவில் நிலப்பதிவுத் தாசில்தாராக இருந்தார். ஆரம்ப காலத்தில் சொக்கலிங்கம் பிள்ளை 'புல ஊர்களுக்கும் மாற்றுதலாகி வேலை பார்க்க நேர்ந்தது. இப்படி * தீர்த்த யாத்திரை உத்தியோகம் பார்த்து வந்த காலத்தில்தான் 1906-ம் வருஷம், ஏப்ரல் மாதம் 23-ம் தேதியன்று கடலூருக்கு அருகிலுள்ள திருப்பாதிரிப்புலியூரில் புதுமைப்பித்தன் தாசில் சொக்கலிங்கம் பிள்ளையின் : சீமந்த புத்திரனாக அவதரித்தார். தமிழ் நாட்டுச் சம்பிரதாயப்படி - புதுமைப் பித்தனுக்கு அவரது தாத்தா விருத்தாசலம் பிள்ளையின் பெயரே இடப்பட்டது.