பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
  • சோவி”>

கூட எழுந்து வந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்து விடுவார். உரிமையோடு பழகும் நண்பர்களிடம் அவர் கோபப்படுவதும் உண்டு; பின்னர் கோபம் தணிந்து தாமாகவே வந்து சூலா வதும் உண்டு. ஒரு தடவை அவர் ஒரு நண்பரிடம் பண உதவி கேட்டார். நண்பருக்கு அப்போது பண உதவி செய்யக்கூடிய வசதி இல்லை. அதைத் தெரிந்து கொண்டதும் புதுமைப் பித்தள் ஆத்திரத்தில், ........நீ அயோக்கியன். வேண்டி.AR வனுக்குக் கொடுக்கமாட்டாய். கேட்டவனுக்குக் கொடுக்க மாட்டாய்........ என்று தாறுமாறாக வாய்க்கு வந்தபடித் திட்டித் தள்ளி விட்டார். ஆனால் அதே நண்பர் இவரது கோபத்தைத் தாங்க முடியாது மறுநாள் அவருக்கு எங்கோ கொஞ்சம் . பணம். பார்த்துக்கொண்டு, அவரது வீட்டுக்கும் போய்ச் சேர்ந்தார். அப்போது புதுமைப்பித்தன் - அந்த நண்பரைக் கண்டதுமே, 'என்னை மன்னித்து விடு. உன்னை ரொம்பவும் ஏசிவிட்டேன். என்னை மன்னிப்பாயா?.... என்று தழுதழுத்துக் கேட்க ஆரம்பித்து விட்டார். புதுமைப்பித்தன் கையில் பணமிருந்தால் தாராளமாய்ச் செலவு செய்வார். புத்தகம் வாங்குவதில் அவர் ஒரு கிறுக்கு, சம்பளம் வாங்குகிற தேதியில் புத்தகக் கடைக்குப் போகாமல் வீட்டுக்கு வரமாட்டார். தமக்குப் பிடித்த புத்தகம் என்ன விலையாயிருந்தாலும், மறு நாள் சாப்பாட்டுக்குத் தம்மிடம் வழியில்லை என்றாலும்கூட, கையிலுள்ள பணத்துக்குப் புத்து கம் வாங்கியே விடுவார்... வாங்கி வந்த புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து முடிப்பதும் உண்டு; சமயங்களில் அப்படியே பீரோவுக்குள் தூக்கி வைத்துவிட்டு, 'படித்துக் கொள்ளலாம்' என்ற எண்ணத்தில் அதைப் படிக்கவே மறந்து போவதும் உண்டு. எழுத்தாளராதலால் இந்தப் புத்தகக் கிறுக்கு அப்படியொன்றும் விசித்திர குணமென்று சொல்ல முடி யாது. ஆனால், புத்தகத்துக்காக மட்டும் அவர் இப்படிச் செலவழிக்க மாட்டார். செலவழிப்பது எப்படி என்று தெரியாமலே செலவழிப்பார். ஒரு தடவை கையில் பணம் நிறைய இருந்தபோது, ஒரு குரோஸ் கில்லெட் பிளேடு களை வாங்கிக் கொண்டுவந்து விட்டார். அந்த ஒரு