பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தன் குரோஸ் பிளேடையும் எதற்காக வாங்கினார், வியாபாரம் பண்ணப்போகிறாரா என்று அதிசயிக்கத் தோன்றும். அவர் வாங்கியதற்குரிய ஒரே காரணம் அவர் கையில் பணம் இருந்து விட்டதுதான். இதுபோலவே ஏதாவது அழகான - சாமான் கண்ணில் தென்பட்டு, கையில் பணமும் இருந்துவிட்டால், பிடித்தது சனி. பணம் காலி, ஒரு முறை இப்படித்தான் வருகிற சம்பளம் வீட்டுச் செலவுக்கே பற்றாதிருந்தபோது, ஒரு டாய்லட் கேஸ் ரொம்ப அழகாயிருந்தது என்பதற்காக, பத்துப் பதினைந்து ரூபாய் விலை கொடுத்து வாங்கி வந்து விட்டார். அப்புறம் அது விஷயமாகக் கணவன், மனைவி இடையே தகராறு. இந்த மாதிரிக் காரணங்களால் அவரது குடும்ப நிர்வாகம் குழப்பமடைவதும் உண்டு. பாக்கிக்காக, வருபவனிடம் 'ஐயாவைக் கேள்' என்பாள் மனைவி. 'அம்மாவைக் கேள்' என்பார் கணவர். இந்த மாதிரிச் சங்கடங் களரல், புதுமைப்பித்தன் தமது 'தினசரி ' சேவையின்போது. சம்பளத்தை முதலில் கமலாம்பாளிடம் ஒப்படைத்து விட்டுத் தான் தம் செலவுக்கு வாங்கிக் கொண்டார். அது முதற் கொண்டு இந்தத் ' தகராறு இல்லாமலிருந்து. பின்னர் அது வழக்கம் போலவே மாறி விட்டதுமுண்டு. இம்மாதிரியான காரணங்கள் ஒருபுறமிருக்க, புதுமைப் பித்தனுக்கு நிரந்தரமான பணவசதியும் இருந்தனெச் சொல்ல முடியாது. ஆனால் பணம் இருந்தாலும் சரி, இல்லா விட்டாலும். சரி? - அவர் ஒரே உற்சாகத்தோடுதான் பேசுவார். அடுத்த வேளைச் சாப்பாடு எங்கேயென்று தெரியாத நிலைமையிலும் அவர் சிரிக்கச் சிரிக்கத்தான் பேசுவார். ஒருமுறை நானும் அவருமே அந்த நிலையில் இருந்தோம். அந்தச் சமயத்தில் நான் மனம் சோர்ந்து போனால் அவர் சொல்வார் : ராசா, இதற்கெல்லாம் வருத்தப்படக் கூடாது. இப்படி வெங்கம்பட்டிகளாக இருந்தால்தான் எதைப் பற்றியும் எவனைப் பற்றியும் தயை தாக்ஷண்யமில்லாமல் எழுதலாம். சொத்து, சுகம் ' என்று வந்துவிட்டால் போலிக் கெளரவமும் வந்து விடும், அதற்குப் பிறகு