பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம் -20 பாடகர் -- - - சங்கீத ஞாணம்! "துமைப்பித்தனைச் சிறுகதை ஆசிரியராகவும், கவி பாடும் கவிராயராகவும்தானே கண்டிருக்கிறோம். அவருக்குச் சங்கீத ஞானமும் உண்டா ? பாட்டுப் பாடும் கவிராயருக்குச் சங்கீத ஞானமும் இருக்கத்தானே வேண்டும்? என்று சிலர் கேட்கலாம். அவரது சங்கீத ஞானத்தைப் பற்றிக் கூறுவதைவிட, ஒரு ரசமான சம்பவத்தைக் கூறலாம்; புதுமைப்பித்தனுக்கு கணேச சர்மா என்று ஒரு நண்பர் உண்டு. அவருக்குச் சங்கீதத்தில் மிகுந்த ஈடுபாடு. நல்ல ஞானம். மேலும் சங்கீத வித்வான்கள் பலருடனும் அவருக்குத் தொடர்பும் பழக்கமும் உண்டு. 'சங்கீதக்காரர் களே பொதுவாக ஹாஸ்யமாகப் பேசுபவர்கள். கணேச சர்மாவுக்குப் புதுமைப்பித்தனோடு அரட்டையடிப்பதில் குஷி. ஒரு தடவை திருவீழிமிழலை சகோதரர்களான நாத சுர வித்வான்கள் சென்னைக்கு வந்திருந்தார்கள். ' கணேச சர்மா, அந்த 'நாதசுர வித்வான்களுக்கு மிகவும் வேண்டிய நண்பர். எனவே தாராளமாய் எதையும் பேசுவார். அவர் அந்த வித்வத் சிரோமணிகளைப் பார்த்து, “'உங்கள் வாசிப்பை வாராரோ கேட்டு ரசிக்கிறார்கள், வெறுமனே தலையை ஆட்டினால் போதுமா? இங்கு ஒரு பெரிய ஞானஸ் தர் இருக்கிறார், என் நண்பர், அவர் சபாஷ் போட்டு விட்