பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தன் கள் சென்னைக்கு வந்தால் புதுமைப்பித்தன் தமது, சோம்பலை யெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு அவர்களைப் போய்ப் உரர்ப்பார், ஆனால், கச்சேரிக்கு மட்டும் போக மாட்டார். அது மட்டுமல்ல; அவர்கள் இருவரோடு நேர்ந்த நட்பின் அறிகுறி யாக , புதுமைப்பித்தன் அவர்களிடம் ஒரு வெகுமதி கேட் டார். என்ன தெரியுமா? ஒரு நாதசுரம்! கவிடாப்பிடியாக நின்று அவர்களி...மிருந்து புத்தம் புதிதான ஒரு நாதசுரத்தை“வாங்கிப் பத்திரமாக வைத்திருந் தார் புதுமைப்பித்தன், ஒருமுறை அவர் என்னிடம் அதைக் காட்டினார்.

    • இது எதற்கு? என்றேன்.
  • 'வருகிறவனைப் பயமுறுத்துவதற்கு; விரட்டுவதற்கு!

என்றார் புதுமைப்பித்தன். பிறகு, என்ன ராசா, ராசரத் தினம் பிள்ளை பத்திரிகைக்குக் கட்டுரை எழுதும்போது, 'நான் மட்டும் ஏன் நாதசுரம் வாசிக்கக்கூடாது? என்று ஒரு கேள்வியைப் போட்டு விட்டார்! புதுமைப்பித்தன் தாம் சொல்லியபடியே நாத ஈரத்தை வைத்துக்கொண்டு சிலரைப் பயமுறுத்தியதும் உண்டு. வந்த ஆசாமி எழுந்து போகவில்லையானால், கொஞ்சம் நாதசுரம் கேக்கியளா? என்று கூறிக்கொண்டே நாதசுரத்தை எடுத்து வந்து விடுவார். வந்தவர் திகைப்பார். “இல்லே. தான் குளிக்கப் போகணும். நீங்க இருக்கிறதுன்னா நம்ப வாசிப்பைக் கேளுங்க என்பார், வந்த ஆசாமிக்கு மறுசொல் வேண்டுமா? எழுந்து போய் விடுவார்! சங்கீதத்தை பற்றி எதுவும் தெரியாத. தெரிய விரும் பாத, புதுமைப்பித்தன் ஒரு தடவை சங்கீத விசாரமே பண்ண ஆரம்பித்து விட்டார். அழகிரிசாமி சங்கீத ஞானமுள்ள சிறந்த எழுத்தாளர். அவரிடம் போய் சங்கீதத்தைப் பற்றித் தர்க்கம் பண்ண ஆரம்பித்தார் புதுமைப்பித்தன். - தர்க்கத்தில் தோற்றது புதுமைப்பித்தன் அல்ல; அழகிரிசாமிதான். ஏன் தெரியுமா? அவரது வாதத்தை