பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம்-21 Exதுமைப்பித்தனோடு பேசிக் கொண்டிருந்தால் பொழுது போவதே தெரியாது. ஆனால் சம்பாஷணையில் மிகுந்த வல்லவ ராக இருக்கும். புதுமைப்பித்தனை மேடையில் பேசிவிட்டால் அது மேடைப் பிரசங்கமாகவே இருக்காது. வந்திருக்கிற.. மகா ஜனங்கள் அத்தனை பேரும் தம் வீட்டில் தாழம்பாயில் உட்கார்ந்து வெற்றிலை போட வந்திருக்கும் நண்பர் கூட்ட. மாகவே அவரது , கண்ணில் படும். அதாவது மேடைமீது ஏறி நின்று பேசினாலும், அவர் எதிரே இருப்பவர்களிடம் சம்பாஷிக்கும் தோரணையில்தான் பேசுவார், 1943-ம் வருஷம் திருநெல்வேலிக்கு வந்திருந்த புதுமைப் பித்தனை. நெல்லை இந்துக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி மேடையில் பேச அழைத்திருந்தனர். கட்டத்துக்கு அ. சீனிவாச ராகவன் தலைவர், தலைவர் அறிமுகத்துக்குப் பின் புதுமைப்பித்தன் எழுந்திருந்தார். பலத்த கரகோஷம். அந்தக் கை தட்டலைக் கண்டு அவர் நெகிழவும் இல்லை; அதைப் பொருட்படுத்தவும் இல்லை. அதை ஒரு விளையாட்டாகக் கருதிக் கட கடவென்று சிரித்தார். பிறகு பேச ஆரம்பித்தார், ‘தலைவர்களே, நண்பர்களே'-இந்த - மாதிரி எந்து. ஆரம்பமும் இல்லை. அவையடக்கமும் இல்லை. எடுத்த. எடுப்பில் இப்படித்தான் பேசினார்: “இதோ இருக்கிறாரே?