பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

N புதுமைப்பித்தன் 'புதுமைப்பித்தனின் தாயான பர்வதத்தம்மான் புதுமைப்பித்தனுக்குப் பிறகு ஒரு பெண் குழநதையை ஐன் றெடுத்துவிட்டு, 1914-ம் வருஷம் காலமானார். தாய். கரலமானபோது புதுமைப்பித்தனுக்கு எட்டு வயது. தாயின் பரிபூரணமான அன்பைப் பெறும் பாக்கியம் புதுமைப்பித்தனுக்குக் கிட்டவில்லை. இந்தத் துர்ப்பாக்கி யத்தைப் புதுமைப்பித்தன் தாம் சாகும் வரையிலும் புதுமைப்பித்தனின் தங்கையின் பெயர் ருக்மணி என்ற' செல்லத்தம்மாள். இந்த அம்மாளுக்கும் விருத்தர் சலம் பிள்ளை என்பவருக்கும்' பின்னர் திருமணம் நடந்தது. அவர் காட்டுப் பாது காப்பு ஆபீசர்; 'கடப்பை ஜில்லாவில் வேலை பார்த்துவிட்டு, அவர் தம் குடும்பத்தோடு இப் போது பாளையங்கோட்டையில் ஓய்வு பெற்றுக் குடி. பர்வதத்தம்மாள் காலமான பின்னர் தாசில் சொக்க லிங்கம் பிள்ளை மறுவிவாகம் செய்து கொண்டார். இரண் டாம் தாரத்தின் மூலம் அவருக்கு மூன்று ஆண் பிள்ளை கன் பிறந்தனர். சொக்கலிக்கம் பிள்ளை இன்று ஜீவிய வந்தராக இருக்கிறார்; வயசு தொண்ணூற்றி மூன்று; நல்ல திடகாத்திரர்; கண்ணாடியில்லாமல் வாசிக்கிறார்; கம்பு இல்லா மல் நடக்கிறார்; துட்டியாகப் பேசுகிறார். அவரைப் 4.Jார்த்தால், புதுமைப்பித்தனின் ஞாபகம் வரத்தான் செய் கிறது. ஜாடை, பேச்சு, சிரிப்பு எல்லாம் அப்படித்தான் தோன்றுகின்றன. சொக்கலிங்கம் பிள்ளை வெறும் தாசில் தார் மட்டுமல்ல; புத்தகாசிரியர்.' இந்திய-ஐரோப்பிய நாட்டு இனங்கள் (Indo - European Races) என்று ஒரு நூலை, பாகம் பாகமாக எழுதியிருக் கிறார், இந்தத் தள்ளாத காலத்திலும் அந் நூலின் மூன்றாம் பாகத்தை எழுதுவதில் முனைந்திருக்கிறார். ஒவ்வொரு பாகமும் ஒரு அகராதியளவு கனம் புதுமைப்பித்தனின் தந்தையை யாராவது பார்த்து,

  • * நீங்கள் விருத்தாசலத்தின் தகப்பனாரா? என்று கேட்டு

விட்டால் அவருக்கு மனம் குன்றிப் போய்விடும். • * தங்கள்