பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தன் முடியாது. ஆனா, அதுக்காக நான் மட்டும் எதை வேணு மானாலும் சொல்லலாமா? அது கூடாது, பொறுப்பில்லாமல் பிள்ளையைப் பெறலாம்; பொறுப்பில்லாமல் கருத்துக்களைப் பெறக்கூடாது! பிறகு மெளனம்.

    • s7னக்குப் பொறுப்பு தெரியும். விருதாக் கதி ஏழு

துறவு இருக்காஹளே. அவுற மாதிரி எழுதத்தான் தெரியாது!* * அவர் மேலும் பேசினார்: "நீங்கதான் இப்போ என் கதை களைப் படிக்கிறீர்களே, எப்படி இருக்கு? கொஞ்சம் சொல்லுங்களேன். காதல் கதைப்பாம்,, காதல் கதை! முத்துச் சுடர் போலே நிலா முன்னே வரணும்னு பாரதி பாடி வச்சான் பாருங்க. அது இந்தக் கதாசிரியர்களுக்குத்தான். நம்ம கதாசிரியர்களுக்கு நிலாவும் தென்றலும் இல்லாவிட்டால் கதையே வராது. கிடையாது.

    • ஆனால் என் கதையிலே காதல் என்ற சொப்பனாவஸ்தை

கிடையாது, என் அம்மாளு புருஷனுக்குக் கஞ்சிக் ' ' காச்சி 2:த்தறதுக்காக, கற்பை விலை பேசுவாள்; 'தொழில் செய்து வாழும் விசாரிகூட மானமாகப் பிழைப்பXள் ; பிச்சை ஏற்க மாட்டாள். என் கதையிலே நிலவும் கிடையாது; தென்றலும் கிடையாது. என் செண்பகராமன்பிள்ளை இருட்டிலே போனார்; இருட்டிலே வந்தார்...** கோவையற்று சம்பாஷணைப் போக்கிலே பேசினாலும் கூட மணிமணியான கருத்துக்களை உதிர்த்து விடுவார் புதுமைப் பித்தன், சென்னை திருவல்லிக்கேணி பெரிய தெருவில் ஒரு பள்ளிக்கட்டத்தில் புதுனமப்பித்தன் - 'அரசியல்' என்பது பற்றி ஒரு முறை பேசினார். அந்தக் கூட்டத்துக்கு 'கலை மகன்: கி. வா. ஜகந்நாதன் தலைவர். கூட்டமே இல்லை. விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய ஒரு சிலர்தான். புதுமைப் சித்தன் அங்கும் அப்படித்தான் பேசினார்; சம்பா