பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில ரசமான ஞாபகங்கள் 158 பிறகு, அவர் என்னிடம் திரும்பி " '{ saved that gin, {நான் அந்த பெண்ணைக் காப்பாற்றினேன்). மகள் என்று சொல்லியிருந்தால் பயல் அவள் பின்னாலேயே , போயிருப் பான்!?" என்று ரகசியமாகச் சொன்னார்! ஒரு நூலாசிரியர் மேலை நாட்டு இலக்கிய விமர்சன முறை யில் தமிழில் ஒரு புத்தகம் எழுதியிருந்தார். எனினும் அந்த தூலில் மேலை நாட்டு இலக்கிய விமர்சன நூல்களிலிருந்து அதிகமான மேற்கோள்களைத்தான் நிறைத்திருந்தார். மேலை நாட்டுக் கருத்துக்களை அவர் மனத்தில் வாங்கி உணர்ந்து எழுதியதாகத் தெரியவில்லை. ஆனால் அந்த நூலுக்கு ஒரு பாராட்டுரை எழுதியிருந்த நூலாசிரியரின் 'தண்பரொருவர் தேசிக விநாயகம் பிள்ளையின் பாட்டு ஒன்றை உதாரணமாகக் குறிப்பிட்டிருந்தார்; பச்சைப் புல்லைத் தின்று வெள்ளைப் பால் தர 8 என்ன பக்குவஞ் செய்வாய் அதனை பகருவையோ பசுவே! எப்படிப் பசுமாடு பச்சைப் புல்லைத் தின்று அமுதமான பாலைத் தருகிறதோ, அது போலவே நூலாசிரியர் மேலை நாட்டு கால்களை உண்டு மாந்தி நமக்கு 'அமுதம் தருகிறார் என்று பாராட்டியிருந்தார் அந்த நண்பர். புதுமைப்பித்தன் இதைப் பார்த்தார். பச்சைப் புல்லா வது. பாலாவது? இது. வைக்கோலையே தின்றுவிட்டு வைக். கோலாகவே கழிந்து தள்ளுகிற மாடு அல்லவா? என்று. கூறினார்! இ. ஸ்ரீ. ஆசார்யா 'சித்திர ராமாயணம் எழுதுவதற்காகக் கம்பனுக்குப் பலபேர் எழுதியுள்ள உரைகளைத் தம் அருகே வைத்து ஏதோ பார்த்துக் கொண்டிருந்தார். தாம் சொல்ல வேண்டிய பாடலுக்குச் சரியான அர்த்தம் அந்த உரைகளில் எதிலும் அவருக்குப் புலப்படவில்லை. 64. பி. 10